அயோடின் ஒற்றைபுளோரைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடின் மோனோபுளோரைடு
| |||
வேறு பெயர்கள்
அயோடின் புளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
13873-84-2 | |||
ChemSpider | 123150 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 139637 | ||
| |||
பண்புகள் | |||
IF | |||
வாய்ப்பாட்டு எடை | 145.903 கி/மோல் | ||
தோற்றம் | நிலைப்புத்தன்மையற்ற பழுப்பு திண்மம் | ||
உருகுநிலை | −45 °C (−49 °F; 228 K) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | அயோடின் ஒற்றைகுளோரைடு அயோடின் ஒற்றைபுரோமைடு அசுட்டட்டைன் ஓரயோடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | குளோரின் ஒருபுளோரைடு புரோமின் ஒற்றைபுளோரைடு அசுட்டட்டைன் ஒற்றைபுளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அயோடின் ஒற்றைபுளோரைடு (Iodine monofluoride) என்பது அயோடின் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஆலசன்களிடை சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு IF ஆகும். சாக்கலேடு பழுப்பு நிறத்திலுள்ள இச்சேர்மம் 0 பாகை செல்சியசு வெப்பநிலையில்[1] விகிதச்சமமின்றி தனிமநிலை அயோடினாகவும் அயோடின் பென்டாபுளோரைடாகவும் சிதைவடைகிறது.
5 IF → 2 I2 + IF5
எனினும் இச்சேர்மத்தின் மூலக்கூற்றுப் பண்புகளை நிறமாலையியல் ஆய்வுகள் மூலமாக உறுதிபடுத்த முடியும். அயோடின் புளோரின் மூலக்கூறுகளுக்கு இடையிலான இடைவெளி 190.9 பைக்கோமீட்டர் மற்றும் I−F பிணைப்பின் பிரிகை ஆற்றல் 277 கிலோயூல் மோல்-1 ஆகும். 298 கெல்வின் வெப்பநிலையில் அயோடின் ஒற்றைபுளோரைடின் உருவாதல் வெப்பத்தின் செந்தர என்தால்பி மாற்றத்தின் அளவு ΔHf° = −95.4 கியூ மோல்−1, மற்றும் கிப்சின் பயனுறு ஆற்றல் அளவு ΔGf° = −117.6 கியூ மோல்−1.என மதிப்பிடப்பட்டுள்ளது.
- I2 + F2 → 2 IF
முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் இரண்டு தனிமங்களும் -45 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து அயோடின் ஒற்றைப் புளோரைடை உருவாக்க முடியும். ஆனால் இது நிலைப்புத்தன்மை அற்ற நிலையில் உள்ளது.
- I2 + IF3 → 3 IF
அயோடினும் அயோடின் டிரைபுளோரைடும் -78 பாகை செல்சியசு வெப்பநிலையில் முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் வினைபுரிந்தாலும் அயோடின் ஒற்றைப் புளோரைடு உருவாகிறது. அயோடின், வெள்ளி(I) புளோரைடுடன் வினைபுரிந்தாலும் அயோடின் ஒற்றைப் புளோரைடு உருவாகிறது.
I2 + AgF → IF + AgI
வினைகள்
[தொகு]தூய்மையான நைட்ரசன் மூவயோடைடு உருவாக்கத்தில் அயோடின் ஒற்றைப் புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.
BN + 3 IF → NI3 + BF3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mary Eagleson (1994), Concise Encyclopedia of Chemistry. Walter de Gruyter. 1201 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-011451-5.