அயோடின் முப்புளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அயோடின் டிரைபுளோரைடு
| |
| வேறு பெயர்கள்
அயோடின்(III)புளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 22520-96-3 | |
| ChemSpider | 10329096 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| IF3 | |
| வாய்ப்பாட்டு எடை | 183.9 g/mol |
| தோற்றம் | மஞ்சள்நிற திண்மம் |
| உருகுநிலை | −28 ° செ வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும். |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | அயோடின் முக்குளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | புரோமின் முப்புளோரைடு |
| தொடர்புடைய சேர்மங்கள் | குளோரின் முப்புளோரைடு அயோடின் ஐம்புளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அயோடின் முப்புளோரைடு (Iodine trifluoride) என்பது IF3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஆலசனிடைச் சேர்மம் ஆகும். மஞ்சள்நிற திண்மமாக காணப்படும் இவ்வேதிப்பொருள் -28 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. தனிமங்களில் இருந்து தொகுப்பு வினையின் வழியாக இதைப் பெறமுடியும் ஆனால் மிகுந்த கவனத்துடன் செயல்படாவிட்டால் வினையின் இறுதியில் IF5 உருவாகிவிடும் என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
வினைகள்
[தொகு]F2 – 45 பாகை செல்சியசு வெப்பநிலையில் CCl3F முன்னிலையில் அயோடினுடன் வினைபுரிந்து அயோடின் முப்புளோரைடைக் கொடுக்கிறது. குறைவான வெப்பநிலையில் புளோரினேற்ற வினையை மாற்று முறையாக கையாள முடியும். I2 + 3XeF2 → 2IF3 + 3Xe. நிலைப்புத்தன்மை குறைவான சேர்மமாக இருப்பதால் அயோடின் முப்புளோரைடு தொடர்பான கூடுதல் விவரங்கள் அறியப்படவில்லை.
வேதிப்பண்புகள்
[தொகு]அயோடின் முப்புளோரைடு ஐந்து இலத்திரன் இணைகளைக் கொண்டுள்ளது. குளோரின் முப்புளோரைடு போலவே T-வடிவத்தில் காணப்படுகிறது என்று வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை கணித்துள்ளது..[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.