அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடைடு
இனங்காட்டிகள்
20461-54-5 Y
Beilstein Reference
3587184
ChEBI CHEBI:16382
ChEMBL ChEMBL185537 Y
ChemSpider 28015 Y
Gmelin Reference
14912
InChI
  • InChI=1S/HI/h1H/p-1 Y
    Key: XMBWDFGMSWQBCA-UHFFFAOYSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00708 Y
பப்கெம் 30165
SMILES
  • [I-]
பண்புகள்
I
வாய்ப்பாட்டு எடை 126.90447 g mol-1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமைடு

குளோரைடு
புளோரைடு

Except where noted otherwise, data are given for materials in their standard state (at 25 °C, 100 kPa)
Infobox references

அயோடைடு (Iodide) என்பது மூலக அயோடினின் மறையேற்றமுள்ள I- அன்னயனாகும். அயோடைடு சேர்மங்களில் அயோடின் -1 ஒக்சியேற்ற எண்ணைக் கொண்டிருக்கும். நாளாந்தம் நாம் உணவில் சேர்க்கும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பிலுள்ள பொட்டாசியம் அயோடைடு இதன் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். அயோடின் குறைபாட்டைத் தவிர்க்கவே உப்பில் அயோடைடு வடிவில் அயோடின் சேர்க்கப்படுகின்றது.

பண்புகள்[தொகு]

அயோடைடு அயன் ஏனைய ஹேலைட்டுக்களின் அன்னயன்களை விட பெரிய அன்னயனாகும். இதன் அயனாரை 206 பைக்கோ மீற்றர்களாகும் (pm). ஏனைய ஹேலைட்டுக்களின் அன்னயன்களின் அயனாரை ஒப்பீட்டளவில் குறைவாகும்: புரோமைடு -196 pm, குளோரைடு- 181 pm, ஃபுளோரைடு- 133 pm. இதன் பெரிய அயனாரை காரணமாக ஏனைய ஹேலைட்டுக்களின் அன்னயன்களை விட தாக்குதிறன் குறைந்ததாகும். எனவே தாக்குதிறன் கூடிய ஹேலைட்டுக்களினால் கரைசலில் அல்லது திரவாமாகவுள்ள அயோடைடு அயனை இடம்பெயர்க்க முடியும். உதாரணமாக குளோரின் வாயு கரைசலிலுள்ள அயோடைடு அயனை இடம்பெயர்க்க வல்லது.

2I- + Cl2 → 2Cl- + I2

அயோடைடு சேர்மங்கள் நீரில் ஓரளவு கரையக்கூடியவை. எனினும் அவற்றின் கரைதிறனும் ஏனைய ஹேலைடுக்களினதை விடக் குறைவானதாகும். நீரில் அயோடின் வாயுவின் கரைதிறன் பொதுவாகக் குறைவாகும். எனினும் நீரில் கரைசல் அயோடைடு அயன் காணப்பட்டால் நீரில் அயோடின் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கும். அயோடின் வாயுவும், அயோடைடு அயனும் தாக்கமடைந்து I3- அயன் உருவாவதால் கரைதிறன் உயர்கிறது. இவ்வாறு கரையும் போது உருவாகும் I3- அயன் கரைசலுக்கு கபில நிறச்சாயலைக் கொடுக்கும்.

உயிரியல் முக்கியத்துவம்[தொகு]

உணவினூடாகவோ நீரினூடாகவோ அயோடைடு அயன் உட்கொள்ளப்படா விட்டால் சிறுவர்களென்றால் மூளை வளர்ச்சிக் குறைபாடும், அனைவருக்கும் கண்டக்கழலையும் ஏற்படலாம். தைரொக்சின் ஓமோனின் உற்பத்திக்குப் போதியளவில் அயோடைடு உட்கொள்ளப்படுதல் வேண்டும்.

உதாரணங்கள்[தொகு]

சேர்மம் சூத்திரம் தோற்றமைப்பு காணப்படும் இடம்/ பயன்பாடு
பொட்டாசியம் அயோடைடு KI வெண்ணிறப் பளிங்குகள் அயடினடங்கிய உப்பின் அயோடைடு கூறு
ஐதரசன் அயோடைடு /ஐதரோ அயடிக் அமிலம் HI நிறமற்ற கரைசல் வன்னமிலம்
வெள்ளி அயோடைடு AgI மஞ்சள் நிறத் தூள்; ஒளி பட்டால் கருமையாகும் புகைப்பிடிப்பில் ஒளியுணர் நாடா.
தைரொக்சின் ஓமோன்
(3,5,3',5'-tetraiodothyronine)
C15H11I4NO4 வெளிர் மஞ்சள் திண்மம் தைரொய்ட் சுரப்பியால் சுரக்கப்படும் வாழ்க்கைக்கு அவசியமான ஓமோன்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iodide - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடைடு&oldid=3384740" இலிருந்து மீள்விக்கப்பட்டது