உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டியம்(I) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டியம்(I) அயோடைடுIndium(I) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடோ இண்டியம்
வேறு பெயர்கள்
இண்டியம் மோனோ அயோடைடு
இனங்காட்டிகள்
13966-94-4 Y
ChemSpider 21241509
EC number 237-746-3
InChI
  • InChI=1S/HI.In/h1H;/q;+1/p-1
    Key: FOVZCYAIUZHXGB-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336605
  • [In]I
பண்புகள்
IIn
வாய்ப்பாட்டு எடை 241.72 g·mol−1
தோற்றம் செம்-பழுப்பு திண்மம்
அடர்த்தி 5.32 கி/செ.மீ3
உருகுநிலை 365 °C (689 °F; 638 K)
கரையாது
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இண்டியம் மோனோ அயோடைடு (Indium monoiodide) என்பது InI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் உலோகமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

இண்டியம் மற்றும் அயோடின் அல்லது இண்டியம் மற்றும் இண்டியம்(III) அயோடைடை வெற்றிடத்தில் 300 °செல்சியசு முதல் 400 °செல்சியசு வெப்பநிலையில் அல்லது இண்டியத்துடன் பாதரசம்(II) அயோடைடை 350 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் இண்டியம் மோனோ அயோடைடு உருவாகும்.[3]

2In + I2 -> 2InI[4]
2In + InI3 -> 3InI
2In + HgI2 -> 2InI + Hg

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இண்டியம்(I) அயோடைடு பழுப்பு-சிவப்பு காந்த திடப்பொருளாக உருவாகிறது. இதன் உருகுநிலையில் கருப்பு நிறமாகக் காணப்படுகிறது. a = 475 பைக்கோமீட்டர், b = 1276 பைக்கோமீட்டர், c = 491 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் Cmcm (இடக்குழு எண். 63) என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[5]

வேதிப் பண்புகள்

[தொகு]

தண்ணிருடன் சேர்க்கப்பட்டால் மெல்ல சிதைவடைகிறது:

2InI + H2O -> InOH + HI

ஆக்சிசன் முன்னிலையில் தண்ணிருடன் வினைபுரிகிறது:[6]

2InI + O + 3H2O -> 2In(OH)2 + 2HI

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indium(I) Iodide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  2. "Indium(I) iodide". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  3. Gasanov, A. A.; Lobachev, E. A.; Kuznetsov, S. V.; Fedorov, P. P. (1 November 2015). "Indium monoiodide: Preparation and deep purification" (in en). Russian Journal of Inorganic Chemistry 60 (11): 1333–1336. doi:10.1134/S0036023615110066. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-8613. https://link.springer.com/article/10.1134/S0036023615110066. பார்த்த நாள்: 29 March 2024. 
  4. Rieke, Reuben D. (30 November 2016). Chemical Synthesis Using Highly Reactive Metals (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-92914-8. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  5. Fedorov, P P; Popov, A I; Simoneaux, R L (31 March 2017). "Indium iodides". Russian Chemical Reviews 86 (3): 240–268. doi:10.1070/RCR4609. Bibcode: 2017RuCRv..86..240F. https://www.russchemrev.org/RCR4609pdf. 
  6. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்(I)_அயோடைடு&oldid=4053053" இலிருந்து மீள்விக்கப்பட்டது