குளோரின் ஒருபுளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குளோரின் ஒருபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
குளோரின் புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7790-89-8 = | |
ChemSpider | 109879 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123266 |
| |
பண்புகள் | |
ClF | |
வாய்ப்பாட்டு எடை | 54.45 கி/மோல் |
அடர்த்தி | 1.62 கி.மி.லி (திரவம், −100 °செ) |
உருகுநிலை | −155.6 °C (−248.1 °F; 117.5 K) |
கொதிநிலை | −100.1 °C (−148.2 °F; 173.1 K) |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.881 D (2.94 × 10−30 C m) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−56.5 kJ mol−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
217.91 J K−1 mol−1 |
வெப்பக் கொண்மை, C | 33.01 J K−1 mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரின் ஒருபுளோரைடு(Chlorine monofluoride) என்பது ClF என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.குளோரின் மோனோபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்ற வாயுவாகக் காணப்படும் இது உயர் வெப்பநிலையிலும் கூட நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. -100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கும்போது குளோரின் ஒருபுளோரைடு வெளிறிய மஞ்சள்நிற திரவமாகக் குறுக்கமடைகிறது. இதனுடைய பல பண்புகள் மூல ஆலசன்களான அல்லது உப்பீனிகளான குளோரின் மற்றும் புளோரின் ஆகியனவற்றிற்கு இடைப்பட்ட நிலையில் உள்ளது.[1]
வினைகள்
[தொகு]குளோரின் ஒருபுளோரைடு ஒரு பல்தி்றமிக்க புளோரினேற்றும் செயலியாக விளங்குகிறது. உலோகங்களையும் அலோகங்களையும் அவற்றின் புளோரைடுகளாக மாற்றி குளோரின் வாயுவையும் அச்செயல்முறையின் விளைவாக வெளியிடுகிறது. உதாரணமாக தங்குதனை தங்குதன் அறுபுளோரைடாகவும், செலினியத்தை செலினியம் நான்மபுளோரைடாகவும் மாற்றுகிறது.
- W + 6 ClF → WF6 + 3 Cl2
- Se + 4 ClF → SeF4 + 2 Cl2
பல பிணைப்புகளாக கூட்டு வினையின் மூலம் அல்லது ஆக்சிசனேற்ற வினையின் மூலம் சேர்மங்களை இச்சேர்மம் குளோரோபுளோரினேற்றமும் செய்கிறது. உதாரணமாக கார்பன் ஓராக்சைட்டில் உள்ள முப்பிணைப்பில் புளோரினையும் குளோரினையும் சேர்த்துவிடுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otto Ruff, E. Ascher (1928). "Über ein neues Chlorfluorid-CIF3". Zeitschrift für anorganische und allgemeine Chemie 176 (1): 258–270. doi:10.1002/zaac.19281760121.
இவற்றையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- National Pollutant Inventory - Fluoride and compounds fact sheet பரணிடப்பட்டது 2006-01-16 at the வந்தவழி இயந்திரம்
- WebBook page for ClF