தாலியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(III) நைட்ரேட்டு
Thallium nitrate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(3+)டிரைநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 140409 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159690
பண்புகள்
N3O9Tl
வாய்ப்பாட்டு எடை 390.398
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை
கொதிநிலை சிதைவடையும்
சிதைவடையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Mallinckrodt Baker
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தாலியம்(III) நைட்ரேட்டு (Thallium(III) nitrate) என்பது தாலியம், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகியவை இணைந்து உருவாகும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Tl(NO3)3.ஆகும்[1] . இது தாலிக் நைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இச்சேர்மம உயர்நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு திண்மம் ஆகும். பொதுவாக இது மூவைதரேட்டாகவே காணப்படும். இதனுடைய பகுதிப்பொருட்களான தாலியம் அயனி மற்றும் நைட்ரேட்டு அயனி இரண்டும் வலுவான ஆக்சிசனேற்றிகளாகும். தோலின் மீது பட்டால் மிகவும் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தாலிக் நைட்ரேட்டு சிதைவடையும்போது நைட்ரசனின் ஆக்சைடுகளைத் தருகிறது. தண்ணீருடன் சேரும் பொழுது இச்சேர்மம் சிதைவடைகிறது. வலிமையான ஒடுக்கிகளுடன் இது முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. மெத்தாக்சில் பீனாலை குயினோன் அசிட்டால்களாகவும், ஆல்க்கீன்களை அசிட்டால்களாகவும், வளைய ஆல்கீன்களை வளையம் சுருங்கிய ஆல்டிகைடுகளாகவும் மாற்றுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. MSDS for thallium(III) nitrate[தொடர்பிழந்த இணைப்பு]
  2. எஆசு:10.1002/047084289X.rt085.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(III)_நைட்ரேட்டு&oldid=3528173" இருந்து மீள்விக்கப்பட்டது