சீரியம்(III) மெத்தேன்சல்போனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சீரியசு மெத்தேன்சல்போனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
73640-09-2 77998-20-0 (இருநீரேற்று) | |
பண்புகள் | |
Ce(CH3SO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 461.46 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிறத் திண்மப் படிகம்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீரியம்(III) மெத்தேன்சல்போனேட்டு (Cerium(III) methanesulfonate ) என்பது Ce(CH3SO3)3·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இருநீரேற்று வடிவமாகக் கிடைக்கும் இச்சேர்மம் வெண்மை நிற உப்பாகக் காணப்படுகிறது. சீரியம்(III) கார்பனேட்டுடன் மெத்தேன் சல்போனிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கும் போது சீரியம்(III) மெத்தேன்சல்போனேட்டு வீழ்படிவாகிறது. 1979 [2][3] ஆம் ஆண்டு எல்.பி. சின்னர் முதன் முதலில் இதைக் கண்டறிந்தார். படிகங்கள் ஒற்றைச்சரிவு பல்பகுதிய அமைப்பில் காணப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு மெத்தேன்சல்போனேட்டு அயனியும் அணைவு எண் 8 ஆகக் கொண்டுள்ள இரண்டு சீரியம் அணுக்களுடன்பிணைப்பு கொண்டுள்ளன[4]. இச்சேர்மம் 120 ° செல்சியசு வெப்பநிலையில் நீர் மூலக்கூறை இழந்து நீரிலி உப்பாக உருவாகிறது. பிற இலந்தனைடுகளில் இருந்தும் இத்தகைய மெத்தேன்சல்போனேட்டுகளைத் தயாரிக்க முடியும்[5]. கரைசலில் உள்ள சீரியம்(III) மெத்தேன்சல்போனேட்டு மின்னியக்க சீரியம்(IV) தயாரிப்பில் முன்னோடியாக விளங்குகிறது. வலிமையான ஆக்சிசனேற்றிகளான மின்னியக்க சீரியம்(IV) இன் உப்புகள் கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகின்றன[6]. மின்னியக்க சீரியம்(IV) தயாரிக்கும் அதே முறையின் அடிப்படையே அரை மின்கலத் துத்தநாக – சீரியம் மின்கலங்களில் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cerium (III) Methanesulfonate in the e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis, எஆசு:10.1002/047084289X.rc044
- ↑ Zinner, L.B. (1979). "Hydrated lanthanide methanesulfonates". Academia Brasileira de Ciências 30: 27.
- ↑ Zinner, L.B. (1980). "Anhydrous lanthanide (III) methanesulfonates". Academia Brasileira de Ciências 52 (4): 715.
- ↑ Aricó, E.M; Zinner, L.B.; Apostolidis, C.; Dornberger, E.; Kanellakopulos, B.; Rebizant, J. (1997). "Structures of the anhydrous Yb(III) and the hydrated Ce(III), Sm(III) and Tb(III) methanesulfonates". Journal of Alloys and Compounds 249: 111–115. doi:10.1016/s0925-8388(96)02756-9.
- ↑ Aricó, E.M.; Zinner, L.B.; Kanellakopulos, B.; Dornberger, E.; Rebizante, J.; Apostolidis, C. (2001). "Structure and properties of hydrated La(III), Nd(III) and Er(III) methanesulfonates". Journal of Alloys and Compounds 323-324: 39–44. doi:10.1016/s0925-8388(01)00975-6.
- ↑ Kreh, Robert P. (1989). "Mediated electrochemical synthesis of aromatic aldehydes, ketones, and quinones using ceric methanesulfonate". The Journal of Organic Chemistry 54 (7): 1526–1531. doi:10.1021/jo00268a010.