சீரியம்(IV) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரியம்(IV) சல்பேட்டு
Cerium(IV) sulfate
Cerium(IV) sulfate
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீரிக் சல்பேட்டு
இனங்காட்டிகள்
13590-82-4 Yes check.svgY
10294-42-5 (நான்கு நீரேற்று) N
ChemSpider 140403 N
InChI
  • InChI=1S/Ce.2H2O4S/c;2*1-5(2,3)4/h;2*(H2,1,2,3,4)/q+4;;/p-4 N
    Key: VZDYWEUILIUIDF-UHFFFAOYSA-J N
  • InChI=1/Ce.2H2O4S/c;2*1-5(2,3)4/h;2*(H2,1,2,3,4)/q+4;;/p-4
    Key: VZDYWEUILIUIDF-XBHQNQODAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159684
SMILES
  • [Ce+4].[O-]S(=O)(=O)[O-].[O-]S([O-])(=O)=O
UNII 4F66FI5T7X N
பண்புகள்
Ce(SO4)2
வாய்ப்பாட்டு எடை 332.24 கி/மோல் (நீரிலி)
404.304 (நான்கு நீரேற்று)
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம் (நீரிலி)
மஞ்சள் ஆரஞ்சு படிகங்கள் (நான்கு நீரேற்று)
அடர்த்தி 3.91 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை 350 °C (662 °F; 623 K) (சிதைவடைகிறது)
கொதிநிலை NA
சிறிதளவு கரைகிறது, அதிக அளவு தண்ணீரில் நீராற்பகுப்பு அடைகிறது.
21.4 கி/100 மி.லி (0 °செ)
9.84 கி/100 மி.லி (20 °செ)
3.87 கி/100 மி.லி (60 °செ)[1]
கரைதிறன் நீர்த்த கந்தக அமிலத்தில் கரைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சீரியம்(IV) சல்பேட்டு (Cerium(IV) sulfate,) என்பது Ce(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது சீரிக் சல்பேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. சில வகையான நீரேற்று வடிவங்களிலும் , Ce(SO4)2(H2O)x என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் சீரியம்(IV) சல்பேட் காணப்படுகிறது. X இன் மதிப்பு 4, 8 அல்லது 12 என வெவ்வேறாக மாறுபடுகிறது. பொதுவாக இவ்வுப்புகள் மஞ்சள் அல்லது மஞ்சள் ஆரங்சு நிறங்களில் திண்மமாக காணப்படுகின்றன. தண்ணீர் மற்றும் நீர்த்த அமிலங்கள் ஆகியன்வற்றில் மிதமாகக் கரைகிறது. இதன் நடுநிலையான கரைசல் மெல்ல சிதைவடைந்து இளமஞ்சள் சீரியம் ஆக்சைடாக (CeO2) வீழ்படிவாகிறது. சீரியம்(IV) சல்பேட் கரைசல்கள் ஆழ்ந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. நான்கு நீரேற்று வடிவம் 180-200 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது தண்ணீரை இழக்கிறது.

குறிப்பாக அமில நிலையில் சீரியம் அயனி ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். சீரியம்(IV) சல்பேட்டுடன் நீர்த்த ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்தால் மெதுவாக தனிமநிலை குளோரின் உருவாகிறது. வலிமையான ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் இது வேகமாக வினைபுரிகிறது. உதாரணமாக சல்பைட்டுடன் அமில சூழ்நிலையில் இது வேகமாகவும் முழுவதுமாகவும் வினைபுரிகிறது.

சீரியம் சேர்மங்கள் குறைத்தல் வினைக்கு உட்படும் போது சீரியசு சேர்மங்கள் உருவாகின்றன. இதற்கான வினை பின்வருமாறு நிகழ்கிறது.

Ce4+ + e → Ce3+

சீரியசு அயனி நிறமற்று காணப்படுகிறது.

பகுப்பாய்வு வேதியலில் ஏற்ற ஒடுக்க தரம் பார்த்தலில் சீரியம்(IV) சல்பேட்டு பயன்படுத்தப்படுகிரது. இவ்வினையில் பெரும்பாலும் இது ஏற்ற ஒடுக்க நிறம் காட்டிகளுடன் பயன்படுத்தப்படுகிறது.

சிரீயக் அமோனியம் சல்பேட்டு இதனுடன் தொடர்புடைய ஒரு சேர்மமாகும்[2].

மெத்தேன்சல்போனிக் அமிலத்தில் Ce(IV) இன் கரைதிறன் தோராயமாக அமில சல்பேட்டு கரைசல்களின் கரைதிறனைவிட 10 மடங்குகள் அதிகமாக இருக்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R., தொகுப்பாசிரியர் (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0487-3. 
  2. Mariappan Periasamy, Ukkiramapandian Radhakrishnan "Cerium(IV) Ammonium Sulfate" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rc040
  3. Kreh, Robert P. (1989). "Mediated electrochemical synthesis of aromatic aldehydes, ketones, and quinones using ceric methanesulfonate". The Journal of Organic Chemistry 54 (7): 1526-1531. doi:10.1021/jo00268a010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்(IV)_சல்பேட்டு&oldid=2052357" இருந்து மீள்விக்கப்பட்டது