சீரியம்(III) கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீரியம்(III) கார்பனெட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
சீரியம்(III) கார்பனெட்டு
சீரியம் டிரைகார்பனேட்டு
வேறு பெயர்கள்
சீரசு கார்பனேட்டு
இனங்காட்டிகள்
537-01-9 Yes check.svgY
EC number 208-655-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160516
UNII CTT48UBF1V Yes check.svgY
பண்புகள்
Ce2(CO3)3
வாய்ப்பாட்டு எடை 460.26 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை
மிகக்குறைவு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீரியம்(III) கார்பனேட்டு (Cerium(III) carbonate) என்பது Ce2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். சீரியம்(III) நேர்மின் அயனிகளும் கார்பனேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. இதனுடைய தூய வடிவம் இயற்கையில் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சீரியத்தைக் கொண்டிருக்கும் கார்பனேட்டுகள், குறிப்பாக பாசிட்னசைட்டு குழு கனிமங்கள் மோனசைட்டுடன் சீரியத்தின் தாதுவாகக் கிடைக்கிறது.

மூலக்கூறு எடை[தொகு]

சீரியம்(III) கார்பனேட்டு சேர்மத்தின் மூலக்கூற்று எடை 460.2587 கி/மோல் ஆகும்[1].

வெவ்வேறு பெயர்கள்[தொகு]

ஐயுபிஏசி முறையில் இதற்கு சீரியம் டிரைகார்பனேட்டு என்று பெயராகும்[2]. டைசீரியம் டிரைகார்பனேட்டு, சீரியம்(III) கார்பனேட்டு, சீரியம் கார்பனேட்டு, சீரசு கார்பனேட்டு, டைசீரியம்(3+) அயனி டிரைகார்பனேட்டு என்பன இதன் வேறு வேதியியல் பெயர்களாகும்.

பயன்[தொகு]

சீரியம்(III) குளோரைடு தயாரிப்பில் சீரியம்(III) கார்பனேட்டு பயன்படுகிறது. மேலும் வெள்ளொளிர் விளக்குகளிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3].

மேற்கோள்கள்[தொகு]