மக்னீசியம் பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Magnesium perchlorate
மக்னீசியம் பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
10034-81-8 Yes check.svgY
ChemSpider 23223 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24840
வே.ந.வி.ப எண் SC8925000
பண்புகள்
Mg(ClO4)2
வாய்ப்பாட்டு எடை 223.206 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்,
நீர் ஈர்கக்கும்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.21 கி/செ.மீ3 (நீரிலி)
1.98 கி/செ.மீ3 (அறுநீரேற்று)
உருகுநிலை
கொதிநிலை சிதைவு
99.3 கி/100 மி.லி
எத்தனால்-இல் கரைதிறன் 23.96 கி/100 மி.லி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R8, R36, R37, R38
S-சொற்றொடர்கள் S17, S26, S27, S36, S37, S39
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் பெர்குளோரேட்டு
பேரியம் பெர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மக்னீசியம் பெர்குளோரேட்டு (Magnesium perchlorate) என்பது Mg(ClO4)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் ஐதராக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து மக்னீசியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது. வலிமையான ஆக்சிசனேற்றியாக செயல்படும் இச்சேர்மம் வாயு பகுப்பாய்வுகளில் மேபடுத்தப்பட்ட உலர்த்தும் முகவராகவும் செயல்படுகிறது.

250[1] 0 செல்சியசு வெப்பநிலையில் மக்னீசியம் பெர்குளோரேட்டு சிதைவடைகிறது. இதனுடைய உருவாதல் வெப்பம் 568.90 கியூ மோல்−1 ஆகும்.[2]

கரைசலின் வெப்ப உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து வினைகளும் பெருமளவு நீரில் மேற்கொள்ளபடுகிறது அனைதரோன் என்ற வணிகப்பெயரில் மக்னீசியம் பெர்குளோரேட்டு விற்பனை செய்யப்படுகிறது. உர்பானா இல்லினோயிசு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஜி.பிரெடரிக் சிமித் தன்னுடைய வாகனப் பணிமணையில் பகுதிச் தொழிற்சாலைப் பொருளாக அனைதரோனை உற்பத்தி செய்தார். பின்னர் நிரந்தரமாக அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலத்தின் தலைநகரமான கொலம்பசுவில் ஜி. பிரெடரிக் சிமித் வேதியியல் நிறுவனத்தில் நிரந்தரமாக தயாரிக்கத் தொடங்கினார். அவர் தன்னுடைய உற்பத்திப் பொருளான மக்னீசியம் பெர்குளோரேட்டை, தற்பொழுது தாமசு அறிவியல் நிறுவனமாக Thomas Scientific உள்ள அன்றைய ஏ.எச். தாமசு நிறுவனத்திற்கு டி ஐதரைட்டு என்ற வணிகப்பெயரில் விற்அனை செய்தார்.

உலர் வாயு அல்லது வாயு மாதிரிகளுக்கு உலர் ஊக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது[3][4]. ஆனால் பெர் குளோரேட்டுகளின் இயல்பான தீங்கு விளைவுகளின் காரணமாக, ஒரு பொது உலர் ஊக்கியாக இது பரிந்துரைக்கப்படுவதில்லை[5]. வெற்றிடத்தில் 250 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி மக்னீசியம் பெர்குளோரேட்டு உலர்த்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. CRC Handbook
  2. Lange's
  3. H. H. Willard, G. F. Smith (1922). "The Preparation and Properties of Magnesium Perchlorate and its Use as a Drying Agent". Journal of the American Chemical Society 44 (10): 2255–2259. doi:10.1021/ja01431a022. 
  4. L. Wu, H. He (1994). "Preparation of perlite-based magnesium perchlorate desiccant with colour indicator". The Chemical Educator 41 (5): 633–637. doi:10.1016/0039-9140(94)80041-3. 
  5. W. L. F. Armarego and C. Chai (2003). Purification of laboratory chemicals. Oxford: Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7506-7571-3.