உள்ளடக்கத்துக்குச் செல்

மக்னீசியம் பெர்மாங்கனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் பெர்மாங்கனேட்டு
Magnesiumion 2 Permanganation
இனங்காட்டிகள்
10377-62-5 Y
13446-20-3 Y
ChemSpider 9732758
EC number 233-827-2
InChI
  • InChI=1S/Mg.2Mn.8O/q+2;;;;;;;;;2*-1
    Key: NQCAHSNYYAIAQM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11557984
  • [Mg+2].O=[Mn](=O)(=O)[O-].O=[Mn](=O)(=O)[O-]
  • [O-][Mn](=O)(=O)=O.[O-][Mn](=O)(=O)=O.[Mg+2].O.O.O.O.O.O
UNII 279I24X1X1
பண்புகள்
Mg(MnO4)2
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மக்னீசியம் பெர்மாங்கனேட்டு (Magnesium permanganate) என்பது Mg(MnO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் ஆக்சிசனேற்றியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

பேரியம் பெர்மாங்கனேட்டை மக்னீசியம் சல்பேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் ஈ. மிட்செர்லிச்சு மற்றும் எச்ச. அசுகாஃப் ஆகியோர் மக்னீசியம் பெர்மாங்கனேட்டை தயாரித்தனர்:[2]

MgSO4 + Ba(MnO4)2 -> Mg(MnO4)2 + BaSO4

மக்னீசியம் குளோரைடுடன் வெள்ளி பெர்மாங்கனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் மக்னீசியம் பெர்மாங்கனேட்டை தயாரிக்கலாம்.

MgCl2 + 2AgMnO4 -> Mg(MnO4)2 + 2AgCl

அறுநீரேற்று மக்னீசியம் பெர்மாங்கனேட்டு (Mg(MnO4)2·6H2O) கரைசலில் இருந்து படிகமாக்கலாம். இது சற்று நீருறிஞ்சும் தன்மை கொண்டதாகும்.[3] அறுநீரேற்றை வெப்பப்படுத்துவதன் மூலம் சிதைவு வினை நிகழ்ந்து நீரற்ற வடிவத்தைப் பெறலாம்.

வேதிப்பண்புகள்[தொகு]

மக்னீசியம் பெர்மாங்கனேட்டு அறுநீரேற்று ஒரு நீல-கருப்பு நிறத் திண்மப் பொருளாகும்.[4] 130 பாகை செல்சியசு வெப்பநிலையில் தன்னியக்க வினையூக்கச் செயல்பாட்டில் சிதைந்து இது ஆக்சிசன் வாயுவை வெளியிடுகிறது. நான்கு நீரேற்று 150 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. கார்பன் டிரைகுளோரைடு, கார்பன் டெட்ராகுளோரைடு, பென்சீன், தொலுயீன், நைட்ரோபென்சீன் ஈதர், லிக்ரோயின் மற்றும் கார்பன் டைசல்பைடு ஆகியவற்றில் இப்படிகங்கள் நடைமுறையில் கரையாது. ஆனால் பிரிடின் மற்றும் நீரற்ற அசிட்டிக் அமிலத்தில் கரைகின்றன. தண்ணீரில் கரைந்து, நீர்த்த கரைசல்களில் முற்றிலுமாக பிரிகையடைகிறது. இது பலவிதமான கரிமச் சேர்மங்களை ஆக்சிசனேற்றுகிறது. டெட்ரா ஐதரோபியூரான், எத்தனால், மெத்தனால், பியூட்டானால், அசிட்டோன் மற்றும் அசிட்டிக் அமிலம் போன்ற பொதுவான கரைப்பான்களுடன் (சில சமயங்களில் நெருப்புடன்) உடனடியாக வினைபுரிகிறது.[2]

பயன்கள்[தொகு]

மக்னீசியம் பெர்மாங்கனேட்டு தொழில்துறையின் பல்வேறு கிளைகளில் பயன்படுத்தப்படுகிறது: ^ஒரு மர செறிவூட்டல் முகவர்.:[2]

  • புகையிலை வடிகட்டிகளில் ஒரு கூட்டுசேர் பொருள் .

தொலியீனிலிருந்து பென்சாயிக்கு அமிலம் உருவாக்கும் காற்று ஆக்சிசனேற்ற முறையிலும் புரோட்டியோம் ஆராய்ச்சியில் ஒரு ஊக்கியாகவும் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saul Wolfe, Christopher F. Ingold (Dec 1983). "Oxidation of organic compounds by zinc permanganate" (in en). Journal of the American Chemical Society 105 (26): 7755–7757. doi:10.1021/ja00364a054. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00364a054. பார்த்த நாள்: 2020-06-27. 
  2. 2.0 2.1 2.2 Kotai, Laszlo; Gacs, Istvan; Sajo, Istvan E.; Sharma, Pradeep K.; Banerji, Kalyan K. (2011-03-29). "ChemInform Abstract: Beliefs and Facts in Permanganate Chemistry - An Overview on the Synthesis and the Reactivity of Simple and Complex Permanganates" (in en). ChemInform 42 (13): no. doi:10.1002/chin.201113233. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/chin.201113233. 
  3. Moles, E.; Crespi, M. Permanganates. III. Anales de la Real Sociedad Espanola de Fisica y Quimica, 1923. 21. 305-316. ISSN: 0365-6675.
  4. Haynes, William M. (2016-06-22). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3.