மக்னீசியம் அலுமினைடு
Appearance
மக்னீசியம் அலுமினைடு (Magnesium aluminide) என்பது மக்னீசியம் மற்றும் அலுமினியம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இடை உலோகச் சேர்மம் ஆகும். பொதுவான நிலைகளில் (மூலக்கூறு கட்டமைப்புகள்) பீட்டா நிலை (Mg2Al3) மற்றும் காமா நிலை (Mg17Al12) ஆகியனவும் அடங்கும். இவ்விரு சேர்மங்களும் கனசதுர படிக அமைப்பில் காணப்படுகின்றன. 5XXX வகை அலுமினியம் உலோகக் கலவையின் முக்கியமானப் பகுதிப்பொருளாக அல்லது மக்னீசியம் அலுமினியம் உலோகக் கலவையின் பகுதிப்பொருளாக மக்னீசியம் அலுமினைடு இருக்கிறது. மற்றும் இது இச்சேர்மத்தின் பல பொறியல் பண்புகளைத் தீர்மானிக்கிறது. ஐதரசன் சேமிக்கும் தொழில் நுட்பத்தில் உலோக ஐதரைடுகள் உற்பத்தி செய்யும் வினைபடு பொருளாகப் பயன்படுத்த ஆராயப்படுகிறது. MgAl சேர்மங்கள் வழக்கத்திற்கு மாறான அளவுகளில் பெரியனவாகும் சிக்கலான அலகு செல்களாகவும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- D. Singh, C. Suryanarayana, L. Mertus, and R-H. Chen (2003). "Extended Homogeneity Range of Intermetallic Phases in Mechanically Alloyed Mg-Al Alloys". Intermetallics 11: 373–376. doi:10.1016/S0966-9795(03)00005-0.