கால்சியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் சல்பைடு
Calcium sulfide
Calcium sulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் சல்பைடு
வேறு பெயர்கள்
கால்சியம் ஒருசல்பைடு,
எபர் கால்சீசு,
கந்தக்மேற்ற சுண்ணாம்பு
ஓல்டாமைட்டு
இனங்காட்டிகள்
20548-54-3 Yes check.svgY
ChemSpider 8373113 Yes check.svgY
EC number 243-873-5
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C17392 N
பப்கெம் 10197613
UNII 1MBW07J51Q N
பண்புகள்
CaS
வாய்ப்பாட்டு எடை 72.143 கி/மோல்
தோற்றம் வெண்மை நிற படிகங்கள்
நீர் உறிஞ்சும்
அடர்த்தி 2.59 கி/செ.மீ3
உருகுநிலை
சிறிதளவு கரையும்
கரைதிறன் ஆல்ககாலில் கரையும்
அமிலமுடன் வினைபுரியும்.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.137
கட்டமைப்பு
படிக அமைப்பு ஆலைட்டு (கனசதுரம்), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Ca2+); எண்முகம் (S2−)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் H2S source
ஈயூ வகைப்பாடு எரிச்சலூட்டும் (Xi)
சுற்றுச் சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R31, R36/37/38, R50
S-சொற்றொடர்கள் (S2), S28, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் சல்பைடு
இசுட்ரான்சியம் சல்பைடு
பேரியம் சல்பைடு
சல்பைடுகள்
தொடர்புடையவை
சோடியம் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் சல்பைடு ( Calcium sulfide) என்பது CaS. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் கனசதுர வடிவ பாறை உப்பாக படிகமாகிறது. வெப்பக் காற்றில் கந்தகம் நீக்கும் செயல் முறையின் விளைபொருளான கிப்சத்தின் மறுசுழற்சியின் பகுதிப்பொருளாக கால்சியம் சல்பைடு ஆராயப்படுகிறது. சல்பைடு அயனிகளைக் கொண்டிருக்கும் மற்ற உப்புகள் போலவே கால்சியம் சல்பைடும் ஐதரசன் சல்பைடு வாயுவின் நெடியைக் கொண்டிருக்கிறது. கால்சியம் சல்பைடு நீராற்பகுப்பு அடைவதால் சிறிதளவு ஐதரசன் சல்பைடு வாயு உருவாவது இதற்குக் காரணமாகும்.

அணு அமைப்பின் அடிப்படையில் சோடியம் குளோரைடின் நோக்குருவில் கால்சியம் சல்பைடும் படிகமாகிறது. இப்படிகத்தில் உள்ள பிணைப்புகள் யாவும் அயனிப்பிணைப்பில் காணப்படுகின்றன. அதிகமான உருகுநிலையும் இதனுடைய அயனிப்பிணைப்பை உறுதி செய்கிறது. படிகத்தில் ஒவ்வொரு S2− அயனியும் ஆறு Ca2+ அயனி எண்முகங்களால் சூழப்பட்டுள்ளன. இதற்கு எதிராக ஒவ்வொரு Ca2+ அயனியும் ஆறு S2− அயனிகளால் சூழப்பட்டுள்ளன.

தயாரிப்பு[தொகு]

கால்சியம் சல்பேட்டின் மீவெப்பக் கார்பனொடுக்க வினையின் மூலமாக கால்சியம் சல்பைடு தயாரிக்கப்படுகிறது. கார்பனை, கார்பன் டை ஆக்சைடாக மாற்றுவதன் மூலமாக கால்சியம் சல்பைடு உருவாகிறது.

CaSO4 + 2 C → CaS + 2 CO2

எஞ்சியுள்ள CaSO4 வினையை மேலும் தொடர்கிறது.

3 CaSO4 + CaS → 4 CaO + 4 SO2

இரண்டாவது வினையில் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சல்பேட்டு -2 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சல்பைடை +4 ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும் கந்தக ஈராக்சைடாக ஆக்சிசனேற்றம் செய்கிறது. அதே வேளையில் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சல்பேட்டு தானும் +4 ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும் கந்தக ஈராக்சைடாக மாறுகிறது. லெப்லாங்கு செயல்முறையில் கால்சியம் சல்பைடு ஓர் உடன் விளைபொருளாகவும் விளைகிறது.

வினைகள் மற்றும் பயன்கள்[தொகு]

நீருடன் தொடர்பு ஏற்படுகையில், அது காற்றில் உள்ள ஈரப்பதமாக இருந்தாலும் சரி கால்சியம் சல்பைடு சிதைவடைந்து Ca(SH)2, Ca(OH)2, மற்றும் Ca(SH)(OH) கலவையைக் கொடுக்கிறது.

CaS + H2O → Ca(SH)(OH)
Ca(SH)(OH) + H2O → Ca(OH)2 + H2S

சுண்ணாம்புப் பால், Ca(OH)2, தனிமநிலை கந்தகத்துடன் வினைபுரிந்து கந்தகச்சுண்ணாம்பைத் தருகிறது. இது ஒரு பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. இப்பூச்சிக் கொல்லியில் உள்ள செயல் திறன்மிக்க பகுதிப்பொருள் பல்சல்பைடு ஆகும். இச்சல்பைடு கால்சியம் சல்பைடு அல்ல என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.[1]

கால்சியம் சல்பைடு ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து நச்சு மிகுந்த ஐதரசன் சல்பைடு வாயுவை வெளியிடுகிறது.

CaS + 2 HCl → CaCl2 + H2S

இயற்கைத் தோற்றம்[தொகு]

ஒல்டாமைட்டு என்ற கனிமமே கால்சியம் சல்பைடின் கனிமவடிவமாகும். சில எரிகற்களின் அரிய பகுதிப்பொருளாகவும் கால்சியம் சல்பைடு காணப்படுகிறது. சூரிய விண்முகில் ஆராய்ச்சியில் கால்சியம் சல்பைடு மிகுந்த அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த சேர்மமாக விளங்குகிறது. தேவையற்ற கரிக்குவியலை எரிக்கும் போதும் இச்சேர்மம் உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_சல்பைடு&oldid=3361869" இருந்து மீள்விக்கப்பட்டது