உள்ளடக்கத்துக்குச் செல்

பலேடியம்(II) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலேடியம்(II) சல்பைடு
Palladium(II) sulfide

பெயர்கள்
வேறு பெயர்கள்
பலேடியம் மோனோசல்பைடு
இனங்காட்டிகள்
12648-43-0 Y
12125-22-3
ChemSpider 9484517
EC number 235-190-6
InChI
  • InChI=1S/Pd.S
    Key: NRUVOKMCGYWODZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82926
  • [S].[Pd]
பண்புகள்
PdS
தோற்றம் பழுப்பு நிறத் திண்மம்[2] or black[3] or grey[4] metallic crystals
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் PdO
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) சல்பைடு, PtS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பலேடியம்(II) சல்பைடு (Palladium(II) sulfide) என்பது PdS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பிற பலேடியம், பிளாட்டினம் சால்கோசனைடுகள் போல பலேடியம்(II) சல்பைடும் சிக்கலான கட்டமைப்பையும் மின்னியல், காந்தவியல் பண்புகளையும் கொண்டுள்ளது.[2][4]

தயாரிப்பு

[தொகு]

பலேடியம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சேர்மத்தின் நீரிய கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தும் போது பலேடியம்(II) சல்பைடு உருவாகிறது.:[2]

Pd2+ + H2S → PdS + 2H+

1813 ஆம் ஆண்டில் வேதியியலாளர் பெர்சிலியசு பலேடியத்தை நேரடியாக கந்தகத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரித்தார்.[4]

Pd + S → PdS

கட்டமைப்பு

[தொகு]

பலேடியம்(II) சல்பைடின் படிகக் கட்டமைப்பானது தோராயமாக சதுரத்தள பலேடியம் மையங்களும் நான்முகி கந்தக மையங்களும் கொண்டதாக படிகமாகிறது.[1]

வினைகள்

[தொகு]

மிகையளவு கந்தகத்துடன் பலேடியம்(II) சல்பைடு சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்பட்டால் பலேடியம் இரு சல்பைடு உருவாகிறது:[2]

PdS + S → PdS2

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

Pd-S பிணைப்பு கொண்ட Pd4S, Pd2.8S, Pd2.2S,PdS2 போன்ற வேறு பல சேர்மங்களும் அறியப்படுகின்றன. பிராக்கைட்டு என்ற கனிமம் (Pt, Pd, Ni)S என்ற தனிம இயைபை கொண்டு PdS உடன் உருவொத்த சேர்மமாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Brese, N. E.; Squattrito, P. J.; Ibers, J. A. (1985). "Reinvestigation of the structure of PdS". Acta Crystallogr. C 41 (12): 1829–1830. doi:10.1107/S0108270185009623. 
  2. 2.0 2.1 2.2 2.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 1152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. 3.0 3.1 Gaskell, T. F. (1937). "The Structure of Braggite and Palladium Sulphide". Z. Kristallogr. 96 (1–6): 203–213. doi:10.1524/zkri.1937.96.1.203. 
  4. 4.0 4.1 4.2 Grønvold, Fredrik; Røst, Erling (1956). "On the Sulfides, Selenides, and Tellurides of Palladium.". Acta Chemica Scandinavica 10: 1620–1634. doi:10.3891/acta.chem.scand.10-1620. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்(II)_சல்பைடு&oldid=4057173" இலிருந்து மீள்விக்கப்பட்டது