பிசுமத்(III) சல்பைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(III) சல்பைடு | |
| வேறு பெயர்கள்
பிசுமத் சல்பைடு டைபிசுமத் டிரைசல்பைடு | |
| இனங்காட்டிகள் | |
| 1345-07-9 | |
| ChemSpider | 141425 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Bi2S3 | |
| வாய்ப்பாட்டு எடை | 514.16 கி/மோல் |
| தோற்றம் | பழுப்பு நிறத்தூள் |
| அடர்த்தி | 6.78 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 850 ˚செ[1] |
| கரையாது | |
| கரைதிறன் | அமிலங்களில் கரையும் |
| -123.0·10−6 cm3/mol | |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
எரிச்சலூட்டும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பிசுமத்(III) சல்பைடு (Bismuth(III) sulphide) என்பது Bi2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்தும் கந்தகமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இயற்கையில் பிசுமத்தினைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது.
தயாரிப்பு
[தொகு]பிசுமத்(III) உப்பை ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிசுமத்(III) சல்பைடு தயாரிக்கலாம்.
2Bi3+ +3H2S → Bi2S3 + 6H+
வெற்றிடமாக்கப்பட்ட சிலிகா குழாயில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் 96 மணி நேரம் தனிம நிலை பிசுமத்தும் தனிமநிலை கந்தகமும் வினை புரிந்தாலும் பிசுமத்(III) சல்பைடு தயாரிக்க முடியும்.
2Bi + 3S → Bi2S3
பண்புகள்
[தொகு]ஆண்டிமனி(III) சல்பைடு சேர்மத்துடன் பிசுமத்(III) சல்பைடு சமகட்டமைப்பு வடிவத்தைக் கொண்டுள்ளது. பிசுமத் அணுக்கள் இரண்டு வேறுபட்ட சூழல்களில் உள்ளன. இரண்டிலும் ஏழு ஒருங்கிணைந்த பிசுமத் அணுக்கள், 4 சமதள முக்கோணத்திலும், 3 அணுக்கள் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படுகின்றன. அமிலங்களுடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடு வாயுவை வெளியிடுகிறது[2].
பிசுமத்(III) சல்பைடு மனித உடலில் இரையக குடல்பாதையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சல்பைடு மனித பெருங்குடலில் இருக்கும் போது தற்காலிகமாக நாக்கில் பிரச்சினைகளும் வாயில் மலச்சிக்கலும் உண்டாகும்.
பயன்கள்
[தொகு]பல சேர்மங்கள் தயாரிப்பில் தொடக்க பொருளாக உள்ளது[3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
- ↑ Wells A.F. (1984) Structural Inorganic Chemistry, 5th edition Oxford Science Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8