உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் புரோமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் புரோமேட்டு
வேறு பெயர்கள்
புரோமிக் அமிலம், கால்சியம் உப்பு
இனங்காட்டிகள்
10102-75-7 Y
ChemSpider 55398 Y
EC number 233-278-9
InChI
  • InChI=1S/2BrHO3.Ca/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2 Y
    Key: GROPHIUSZODNGU-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2BrHO3.Ca/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2
    Key: GROPHIUSZODNGU-NUQVWONBAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61478
  • [Ca+2].[O-]Br(=O)=O.[O-]Br(=O)=O
UNII QJ2S78C3RO N
பண்புகள்
Ca(BrO3)2
வாய்ப்பாட்டு எடை 295.8824 கி/மோல்
தோற்றம் வெண்மையான ஒற்றைச்சரிவு படிகங்கள்
அடர்த்தி 3.33 கிராம்/செ.மீ3[1]
உருகுநிலை 180 ° செல்சியசு
230 கி/100 மி.லி (20 °செல்சியசில்)
-84.0•10−6 செ.மீ3/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் புரோமைடு
கால்சியம் குளோரைடு
கால்சியம் சல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் புரோமேட்டு
சோடியம் புரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கால்சியம் புரோமேட்டு (Calcium bromate) என்பது , Ca(BrO3)2•H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[2]. புரோமிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு கால்சியம் புரோமேட்டு எனக் கருதப்படுகிறது. பெரும்பாலும் Ca(BrO3)2•H2O என்ற வாய்ப்பாடு கொண்ட ஒற்றை நீரேற்று வடிவில் இது கிடைக்கிறது.

தயாரிப்பு

[தொகு]

கால்சியம் ஐதராக்சைடுடன் சோடியம் புரோமேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக கால்சியம் புரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. கால்சியம் சல்பேட்டுடன் பேரியம் புரோமேட்டைச் சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.

பண்புகள்

[தொகு]

180 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் கால்சியம் புரோமேட்டு சிதைவடைந்து கால்சியம் புரோமைடையும் ஆக்சிசனையும் [2] கொடுக்கிறது.

கால்சியம் புரோமைடு கரைசலை மின்னாற்பகுப்பு செய்வதன் வழியாகவும் கால்சியம் புரோமேட்டு கிடைக்கும் எனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ924பி என அடையாளமிடப்பட்டு சில நாடுகளில் ரொட்டி தயாரித்தலில் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Public Health Goal for Bromate in Drinking Water" (PDF). Office of Environmental Health Hazard Assessment, California Environmental Protection Agency. December 2009. பார்க்கப்பட்ட நாள் August 21, 2018.
  2. 2.0 2.1 Ropp, Richard C (2012-12-31). Encyclopedia of the Alkaline Earth Compounds. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444595539.
  3. Lewis, Richard J (1989). Food Additives Handbook. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780442205089.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_புரோமேட்டு&oldid=2749832" இலிருந்து மீள்விக்கப்பட்டது