கால்சியம் தைட்டனட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் தைட்டனட்டு
CaTiO3 perovskite structure.png
இனங்காட்டிகள்
12049-50-2 Yes check.svgY
ChemSpider 17340234 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16212381
வே.ந.வி.ப எண் XR2568666
பண்புகள்
CaTiO3
வாய்ப்பாட்டு எடை 135.943 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறத்தூள்
அடர்த்தி 3.98 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 3,000 °C (5,430 °F; 3,270 K)
கரையாது
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
>1200 மி.கி/கி.கி (சவாய்வழி, எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் தைட்டனட்டு (Calcium titanate) என்பது CaTiO3 , என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. கனிமமாக இருக்கும்போது இது பெரோவ்சிகைட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 1792–1856 ஆம் ஆண்டைச் சேர்ந்த உருசியாவின் கனிம வேதியியலாளர் எல்.ஏ. பெரோவ்சிகி இக்கனிமத்தைக் கண்டறிந்தார். கால்சியம் தைட்டனட்டு ஒரு நிறமற்ற எதிர்காந்தத் தன்மையுடைய திண்மம் ஆகும். சிலசமயங்களில் கனிமநிலையில் இது அதிலுள்ள மாசுக்களால் நிறம் பெற்றும் காணப்படுகிறது.

தொகுப்பு முறை[தொகு]

கால்சியம் ஆக்சைடு மற்றும் தைட்டானியம் ஈராக்சைடு இரண்டும் 1300 0 செல்சியசு வெப்பநிலையில் இணைந்து கால்சியம் தைட்டனட்டு உண்டாகிறது. கூழ்மக் – குழைமச் செயல்முறையில் சற்றுக் குறைவான வெப்பநிலையில் அதிகத் தூய்மையான கால்சியம் தைட்டனட்டு தயாரிக்கப்படுகிறது. கூழமக் குழைமத்தில் இருந்து தூள் தயாரிக்கப்படுவதால் இவ்வுப்பு மேலும் அழுந்தக்கூடியதாகவும் கணக்கிடப்பட்ட அளவான (~4.04 கி/மி.லிl) அடர்த்திக்கு நெருக்கமாகவும் உள்ளது.[1][2]

அமைப்பு[தொகு]

கால்சியம் தைட்டனட்டு படிகங்கள் செஞ்சாய்சதுர அமைப்பில் அதிலும் குறிப்பாக பெரோவ்சிகைட்டு அமைப்பில் கிடைக்கின்றன[3]. இந்நோக்குருவில் Ti(IV) மையங்கள் எண்முகமும் மற்றும் Ca2+ மையங்கள் 12 ஆக்சிசன் மையங்களின் கூண்டில் ஆக்ரமிக்கின்றன. பல உபயோகமுள்ள பொருட்கள் இவ்வமைப்புடன் தொடர்புடைய அமைப்புகளை ஏற்றிருக்கின்றன. உதாரணம்: பேரியம் தைட்டனட்டு அல்லது அமைப்பு மாறுபாடு கொண்ட இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு ஆகியன உதாரணங்களாகும்.

பயன்கள்[தொகு]

தைட்டானியத்தின் தாது என்பதைத் தாண்டி கால்சியம் தைட்டனட்டு மிகக் குறைவான பயன்களைக் கொண்டிருக்கிறது. இச்சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தைட்டானியம் உலோகம் தயாரிக்கலாம் அல்லது பெர்ரோதைட்டானியம் உலோகக் கலவையைத் ref>Heinz Sibum, Volker Günther, Oskar Roidl, Fathi Habashi, Hans Uwe Wolf, "Titanium, Titanium Alloys, and Titanium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:095 10.1002/14356007.a27 095</ref> தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pfaff, G. (1994). "Synthesis of calcium titanate powders by the sol-gel process". Chemistry of Materials 6: 58. doi:10.1021/cm00037a013. 
  2. Dunn, B.; Zink, J. I. (2007). "Sol–Gel Chemistry and Materials". Accounts of Chemical Research 40 (9): 729. doi:10.1021/ar700178b. பப்மெட்:17874844. 
  3. R. H. Buttner, E. N Maslen: Electron difference density and structural parameters in CaTiO3. In: Acta Crystallographica. 1992, B48, 644-649. எஆசு:10.1107/S0108768192004592

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]