மோனோகால்சியம் அலுமினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோகால்சியம் அலுமினேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மோனோகால்சியம் அலுமினேட்டு
இனங்காட்டிகள்
பப்கெம் 159415
பண்புகள்
CaAl2O4
வாய்ப்பாட்டு எடை 158.038676 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மோனோகால்சியம் அலுமினேட்டு (Monocalcium aluminate) என்பது CaAl2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் அலுமினேட்டு வகைச் சேர்மங்களில் இதுவும் ஒரு சேர்மமாகும்[1]. இயற்கையில் மிக அரிதாகத் தோன்றும் மோனோகால்சியம் அலுமினேட்டு குரோடைட்டு, திமிட்ரியிவானோவைட்டு என்ற இரண்டு பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது. இவையிரண்டும் விண்கற்களில் இருந்து கிடைப்பதாகக் கருதப்படுகிறது[2][3]. கால்சியம் அலுமினேட்டு சிமெண்ட்டுக்களில் இதுவொரு முக்கியப் பகுதிப்பொருளாக இருக்கிறது.

பண்புகள்[தொகு]

கால்சியம் கார்பனேட்டு மற்றும் அலுமினிய ஆக்சைடு சேர்மங்களை பொருத்தமான விகிதத்தில் சேர்த்து கலவையை உருகும் வரையில் சூடேற்றும் போது மோனோகால்சியம் அலுமினேட்டு உருவாகிறது. 1390° செல்சியசு வெப்பநிலையில் இக்கலவை ஓரியைபின்றி உருகுகிறது. மோனோகால்சியம் அலுமினேட்டு படிகங்கள் ஒற்றைச்சரிவும் போலியறுங்கோண வடிவுக் கட்டமைப்பும் 2945 கி.கி.மீ−3 அடர்த்தியும் கொண்டுள்ளன. கால்சியம் அலுமினேட்டு வகை சிமெண்ட்டுகளில் இது திண்மக் கரைசலாக உள்ளது. சிமென்ட்டின் மொத்த அளவைச் சார்ந்து அதில் சிறு அளவில் பிற தனிமங்கள் கலந்துள்ளன. Ca0.93Al1.94Fe0.11Si0.02O4 என்பது கால்சியம் அலுமினியம் சிமெண்டின் ஒரு குறிப்பிட்ட இயைபு அளவு ஆகும்[4]. இது தண்ணிருடன் தீவிரமாக வினைபுரிந்து சிற்றுறுதிநிலை நிரேற்றுகளை CaO•Al2O3•10H2O அல்லது 2CaO•Al2O3•8H2O, 3CaO•Al2O3•6H2O நீரேற்றுகளின் கலவை மற்றும் Al(OH)3 கூழ்மம் ஆகியனவற்றை உருவாக்குகிறது. கால்சியம் அலுமினேட்டு சிமெண்ட்டுகளின் வலிமை அதிகரித்தலில் இவ்வினைகள் முதல் படிநிலையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. H F W Taylor, Cement Chemistry, Academic Press, 1990, ISBN 0-12-683900-X, p 35
  2. https://www.mindat.org/min-30909.html
  3. https://www.mindat.org/min-40468.html
  4. P. C. Hewlett (Ed)Lea's Chemistry of Cement and Concrete: 4th Ed, Arnold, 1998, ISBN 0-340-56589-6, p715