தையோனைல் புரோமைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
தையோனைல் புரோமைடு
| |||
வேறு பெயர்கள்
கந்தகாக்சி இருபுரோமைடு
| |||
இனங்காட்டிகள் | |||
507-16-4 | |||
ChemSpider | 61483 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 68176 | ||
| |||
பண்புகள் | |||
SOBr2 | |||
வாய்ப்பாட்டு எடை | 207.87 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
அடர்த்தி | 2.688 கி/மி.லி, திரவம் | ||
உருகுநிலை | −52 °C (−62 °F; 221 K) | ||
கொதிநிலை | 68 °C (154 °F; 341 K) at 40 mmHg | ||
சிதைவடையும் | |||
கரைதிறன் | HBr , அசிட்டோன், மற்றும் ஆல்ககால் உடன் வினைபுரியும் பென்சீன், தொலுயீன், ஈதரில் கரையும். | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தண்ணீர் ஐதரசன் புரோமைடு ஆகியவற்றால் பாதிக்கப்படும். | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | "External MSDS" | ||
R-சொற்றொடர்கள் | R14 R20/21/22 R29[1] R34 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2) S8[1] S26 S30 S36/37/39 S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தையோனைல் புரோமைடு (Thionyl bromide) என்பது SOBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனையொத்த வரிசைச் சேர்மமான தையோனைல் குளோரைடை விட இச்சேர்மம் குறைவான நிலைப்புத் தன்மையும் மிகக்குறைவான பயன்பாடும் கொண்டுள்ளது. ஐதரசன் புரோமைடை தையோனைல் குளோரைடுடன் வினைப்படுத்துவதால் தையோனைல் புரோமைடு தோன்றுகிறது. வலிமையான அமிலம் வலிமை குறைந்த ஒரு அமிலமாக மாற்றப்படும் இவ்வினை ஒரு தனித்துவம் மிக்க வினையாகும்.
- SOCl2 + 2HBr → SOBr2 + 2HCl
α,β- நிறைவுறா கார்பனைல்களின் சில புரோமினேற்ற வினைகளுக்கு தையோனைல் புரோமைடு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஆல்ககால்களை ஆல்க்கைல் புரோமைடுகளாக மாற்றும் வினைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர தையோனைல் புரோமைடு எளிதாக நீராற்பகுப்பு அடைந்து கந்தக டை ஆக்சைடைக் கொடுக்கிறது.
- SOBr2 + H2O → SO2 + 2HBr
பாதுகாப்பு
[தொகு]தையோனைல் புரோமைடு எளிதாக நீராற்பகுப்பு அடைந்து அபாயகரமான ஐதரசன் புரோமைடு வாயுவை வெளியிட்டு ஒரு கண்ணீர் புகைக் குண்டு போலச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]Mundy, B. P. (2004). "Thionyl Bromide". Encyclopedia of Reagents for Organic Synthesis. Ed. Paquette, E.. New York: J. Wiley & Sons. DOI:10.1002/047084289X.rt098.