செலீனியம் இருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலீனியம் இருசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செலீனியம் டைசல்பைடு
வேறு பெயர்கள்
செலீனியம் சல்பைடு
இனங்காட்டிகள்
7488-56-4 Yes check.svgY
ATC code D01AE13
ChEMBL ChEMBL1200680 N
ம.பா.த Selenium+sulfide
பப்கெம் 24087
வே.ந.வி.ப எண் VS8925000
பண்புகள்
SeS2
வாய்ப்பாட்டு எடை 143.09 கி/மோல்
தோற்றம் பழுப்பும் ஆரஞ்சும் கலந்த தூள்
மணம் ஐயத்திற்கு இடமளிக்கும்
அடர்த்தி 3 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 118 முதல் 119 °C (244 முதல் 246 °F; 391 முதல் 392 K) (சிதைவடையும்)
மிகக்குறைவு
கரைதிறன் அமோனியம் ஒருசல்பைடில் கரையும்
கரிமக் கரைப்பான்களில் சிறிதளவு கரையும்.
காடித்தன்மை எண் (pKa) 2-6
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நச்சு (T)
சுற்றுச் சூழலுக்கு அபாயம் (N)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செலீனியம் ஈராக்சைடு
செலீனிக் அமிலம்
செலீனசமிலம்
ஏனைய நேர் மின்அயனிகள் ஐதரசன் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

செலீனியம் இருசல்பைடு (Selenium disulfide) என்பது SeS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதிச் சேர்மமாகும். கந்தகம், செலீனியம் இரண்டு தனிமங்களும் சங்கிலி மற்றும் வளையமாதலில் பெரிதும் பங்கேற்கின்றன. இதனால் இவ்விரண்டு தனிமங்கள் இணைந்து உருவாகும் பல்வேறு கலப்புலோகங்கள்[1] அறியப்படுகின்றன. செலீனியம் இருசல்பைடு, கந்தக ஈராக்சைடிற்கு ஒத்தவரிசைச் சேர்மம் அல்ல.

மருத்துவத்தில் செலீனியம் இருசல்பைடு[தொகு]

முடிக்கழுவிகளில் பூஞ்சையெதிர்ப்பியாக செலீனியம் இருசல்பைடு சேர்க்கப்பட்டு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. உச்சந்தலையில் பொடுகு மற்றும் தோலுமியாக்கி பூஞ்சையுடன் ஊறல் தோலழற்சி போன்றவற்றுக்கான சிகிச்சையில் செலினியம் இருசல்பைடு பயன்படுகிறது.[2][3][4] அமெரிக்காவில் 1% செறிவு மற்றும் 2.5% செறிவுகளில் செலீனியம் இருசல்பைடு கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மருத்துவர்களின் பரிந்துரைக்கு மட்டும் விற்கப்படும் 2.5% செலினியம் இருசல்பைடு உடலில் காணப்படும் ஒரு வகை பூஞ்சை நோயான தோல்படைக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.

வேதியியல் உள்ளமைப்பு[தொகு]

1,2,3-Se3S5 இன் அமைப்பு

செலீனியம் இருசல்பைடு தோராயமான SeS2 அமைப்பைக் கொண்டிருப்பதால் இது சில நேரங்களில் செலீனியம் சல்பைடு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முழுமையான வேதிச் சேர்மம் என்ற பகுப்புக்கு உட்படாததால் இதை விற்பனைக்காத் தயாரிக்கப்படும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். 1:2. விகிதத்தில் செலீனியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் இணைந்து சங்கிலிவளையக் கலவைகள் உருவாகின்றன. இவ்வளையக் கலவைகளில் செலீனியமும் கந்தகமும் SenS8−n. என்ற பொது வாய்ப்பாட்டின் அடிப்படையில் வளையங்களில் இடம்பெறுகின்றன. முடியின் நிறம் மாற்றவும் முடிச்சாயங்களின் நிறத்தை மாற்றவும் செலீனியம் இருசல்பைடு பெரிதும் உதவுகிறது. உலோக அணிகலன்கள் தொழிலிலும் நிறம் மாற்றும் செயல்களுக்கு இதைப் பயன்படுத்துகிறார்கள்.

பிற செலீனியம சல்பைடுகள்[தொகு]

பல செலீனியம் சல்பைடுகள் அறியப்படுகின்றன. அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் (NMR) சோதனைகளில் 77Se பயன்படுத்தப்படுகிறது. சால்கோசென்களின் வளைய உள்ளிடை மாற்றத்திலும் இவை பயன்படுகின்றன.[5]. செலீனியம் ஒருசல்பைடு (SeS) மட்டுமே விலங்குகளில் புற்றுநோய் உண்டாக்கும் ஊக்கியாகச் செயல்படும் செலீனியம் சேர்மம் என அறியப்படுகிறது[6]. கடந்த காலத்தில் செலீனியம் ஒருசல்பைடுடன் தனிமநிலை செலீனியம் மற்றும் கந்தகம் பயன்படுத்தப்பட்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டதால்[7] மருந்துகளின் சரியான உட்பொதிவு வடிவம்[8] அறிதலில் குழப்பமே நிலவுகிறது[9].

மேற்கோள்கள்[தொகு]

  1. Cyclic selenium sulfides R. Steudel, R. Laitinen, Topics in Current Chemistry, (1982), 102, 177-197
  2. Selenium(IV) sulfide - pharmacy codes search engine
  3. "Chemicals of Selenium .Se". 2008-04-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. Accessed Dec. 24, 2007
  5. Pekonen, Pentti.; Hiltunen, Yrjō; Laitinen, Risto S.; Pakkanen, Tapani A. (1991). "Chalcogen ring interconversion pathways. 77Se NMR spectroscopic study of the decomposition of 1,2,3,4,5-Se5S2 to 1,2,3,4,5,6-Se6S2 and 1,2,3,4-Se4S2". Inorganic Chemistry 30 (19): 3679. doi:10.1021/ic00019a022. 
  6. "selenium compounds". 2007-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-20 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Definition: selenium sulfide from Online Medical Dictionary".
  8. "DrugBank: DB00971 (Selenium Sulfide)".
  9. "selenium sulfide: Definition and Much More from Answers.com".

உசாத்துணை[தொகு]