செலீனியம் டெட்ராபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலீனியம் டெட்ராபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுரோமோ-λ4-செலேன்
வேறு பெயர்கள்
செலீனியம் டெட்ராபுரோமைடு, செலீனியம்(IV) புரோமைடு
இனங்காட்டிகள்
7789-65-3
ChemSpider 74224
EC number 232-181-9
InChI
  • InChI=1S/Br4Se/c1-5(2,3)4
    Key: VTQZBGAODFEJOW-UHFFFAOYSA-N
  • InChI=1/Br4Se/c1-5(2,3)4
    Key: VTQZBGAODFEJOW-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82246
SMILES
  • Br[Se](Br)(Br)Br
UNII 8O54YXR180
பண்புகள்
SeBr4
வாய்ப்பாட்டு எடை 398.576
அடர்த்தி 4.029 கி/செ.மீ3
உருகுநிலை 75 °C (167 °F; 348 K) (கரையும்)
கொதிநிலை 115 °C (239 °F; 388 K) (பதங்கமாகும்)
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம் (α)
monoclinic (β)
புறவெளித் தொகுதி P31c, எண். 159 (α)
C2/c, No.15 (β)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H314, H331, H351, H373, H410
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P280, P281, P301+310, P301+330+331, P302+352, P303+361+353
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செலீனியம் டெட்ராபுளோரைடு
செலீனியம் டெட்ராகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தெலூரியம் டெட்ராபுரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

செலீனியம் டெட்ராபுரோமைடு (Selenium tetrabromide) என்பது SeBr4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

தனிம புரோமின் மற்றும் செலீனியம் ஆகியவற்றை வினைபுரியச் செய்து செலினியம் டெட்ராபுரோமைடு தயாரிக்கலாம்:[1][2]

Se + 2Br2 -->SeBr4

பண்புகள்[தொகு]

கருப்பு நிறம் கொண்ட முக்கோண வடிவ α-SeBr4 செலீனியம் டெட்ராபுரோமைடு மற்றும் ஒற்றைச்சரிவு படிக அமைப்பிலான ஆரஞ்சு-சிவப்பு நிற β-SeBr4 செலீனியம் டெட்ராபுரோமைடு என்ற இரண்டு உருவங்களில் உள்ளது. இவை இரண்டும் நாற்பகுதிகளையுடைய கியூபேன் போன்ற Se4Br16 அலகுகளைக் கொண்டுள்ளன ஆனால் இவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதில் வேறுபடுகின்றன. [3] கார்பன் டைசல்பைடு, குளோரோபார்ம் மற்றும் எத்தில் புரோமைடு ஆகிய கரைப்பான்களில் செலீனியம் டெட்ராபுரோமைடு கரைகிறது. ஆனால் தண்ணீரில் இச்சேர்மம் சிதைவடைகிறது.[4] அதனால் ஈரமான காற்றில் செலினசு அமிலத்தை உருவாக்குகிறது.

செலீனியம் டெட்ராபுரோமைடு புரோமின்-நிறைவுற்ற வளிமண்டலத்தின் கீழ் மட்டுமே நிலைப்புத் தன்மை கொண்டுள்ளது. வாயு அடர்த்திக்கான வாயு கட்ட அளவீடுகள் சேர்மம் செலீனியம் மோனோபுரோமைடு மற்றும் புரோமின் வாயுக்களாகச் சிதைவதைக் குறிக்கிறது.[2]

2SeBr4 --> Se2Br2 + 3Br2

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பக். 772-774. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. 2.0 2.1 Tideswell, N. W.; McCullough, J. D. (1956). "Selenium Bromides. I. A Spectrophotometric Study of the Dissociation of Selenium Tetrabromide and Selenium Dibromide in Carbon Tetrachloride Solution1,2". Journal of the American Chemical Society 78 (13): 3026–3029. doi:10.1021/ja01594a025. 
  3. Born, Ref. P.; Kniep, R.; Mootz, D. (1979). "Phasenbeziehungen im System Se-Br und die Kristallstrukturen des dimorphen SeBr4". Z. Anorg. Allg. Chem. 451 (1): 12–24. doi:10.1002/zaac.19794510103. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/zaac.19794510103. 
  4. Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. CRC Press. பக். 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1461-1.