தெலூரியம் டெட்ராபுரோமைடு
இனங்காட்டிகள் | |
---|---|
10031-27-3 | |
ChemSpider | 74282 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82311 |
SMILES
| |
UNII | 7A29EFJ1AF ![]() |
பண்புகள் | |
TeBr4 | |
வாய்ப்பாட்டு எடை | 447.22 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் ஆரஞ்சு படிகங்கள் |
அடர்த்தி | 4.3 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | |
கொதிநிலை | decomposes at 420 °C (788 °F; 693 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
தெலூரியம் டெட்ராபுரோமைடு (Tellurium tetrabromide) என்பது TeBr4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தெலூரியம் டெட்ராகுளோரைடு போன்ற நான்கு மூலக்கூற்று கட்டமைப்பையே தெலூரியம் டெட்ராபுரோமைடும் பெற்றுள்ளது [1]. தெலூரியத்துடன் புரோமினை வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள். ஆவிநிலையிலுள்ள தெலூரியம் டெட்ராபுரோமைடு பிரிகை அடைகிறது :[1].
- TeBr4 → TeBr2 + Br2
உருகிய நிலையில் உள்ளபோது TeBr3+ மற்றும் Br− அயனிகளாகப் பிரிகை அடைந்து இது ஒரு நல்ல கடத்தியாகச் செயல்படுகிறது. பென்சீன் மற்றும் தொலியீன் கரைசல்களில் கரைந்திருக்கும்போது இது நான்கு மூலக்கூற்று கட்டமைப்பில் (Te4Br16) நின்று கடத்தாப் பொருளாகச் செயல்படுகிறது. அசிட்டோநைட்ரைல் (CH3CN) போன்ற கொடையளிக்கும் பண்பு கொண்ட கரைப்பான்களில் கரைந்திருக்கும்போது அயனி அணைவுச் சேர்மங்கள் உருவாகி அக்கரைசலை கடத்தும் பண்பு உடையதாக மாற்றுகிறது.
- TeBr4 + 2CH3CN → (CH3CN)2TeBr3+ + Br−
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Inorganic Chemistry,Egon Wiberg, Arnold Frederick Holleman Elsevier 2001 ISBN 0-12-352651-5