செலீனோசிஸ்டீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
3-செலனைல்-2-அமினோ புரோபநோயிக் அமிலம்
| |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
10236-58-5 | |||
ChEMBL | ChEMBL109962 | ||
ChemSpider | 23436 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C05688 | ||
பப்கெம் | 25076 | ||
| |||
பண்புகள் | |||
C3H7NO2Se | |||
வாய்ப்பாட்டு எடை | 168.07 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
செலீனோசிஸ்டீன் [Selenocysteine (Se-Cys)] என்னும் அமினோ அமிலம் பல்வேறு நொதிகளில் (உதாரணமாக, குளூடாதையோன் பெராக்சைடுகள், டெட்ராஅயோடோதைரோனின் அயோடின் நீக்கிகள், தையோரெடாக்சின் குறைப்பிகள், ஃபார்மேட் ஹைட்ரசன் நீக்கிகள், கிளைசின் குறைப்பிகள் மற்றும் சில ஹைட்ரசன் ஏற்றிகள்) உள்ளது.
பெயரிடல்முறைமை
[தொகு]வேதிப்பெயர் ஒழுங்குமுறைக் குழுவினால் (IUPAC/IUBMB) செலீனோ சிஸ்டீனின் மூவெழுத்து மற்றும் ஓரெழுத்தாக, Sec மற்றும் U முறையேப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]
சிஸ்டீனைப் போன்ற கட்டமைப்பை செலீனோசிஸ்டீன் கொண்டிருந்தாலும், கந்தகத்திற்கு பதிலாக செலீனியம் அணுவைக் கொண்டுள்ளதால் செலீனோல் தொகுதியை உருவாக்குகிறது. ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட செலீனோ சிஸ்டீன் படிவங்களைக் கொண்டப் புரதங்கள் செலீனோ புரதங்கள் என்றழைக்கப்படுகின்றன.
உயிரியல் பண்புகள்
[தொகு]செலீனோசிஸ்டீன், சிஸ்டீனைக் காட்டிலும் குறைந்த காடித் தன்மை எண்ணையும் (pKa), ஆனால் அதிக குறைப்புத் திறனையும் கொண்டதாகவும் உள்ளது. இப் பண்புகள், செலீனோ சிஸ்டீனை எதிர் ஆக்சிகரணப் புரதங்களில் பயன்பட உதவுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 12th Edition, 8584
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature (JCBN) and Nomenclature Committee of IUBMB (NC-IUBMB) (1999). "Newsletter 1999" (reprint, with permission). European Journal of Biochemistry 264 (2): 607–609. doi:10.1046/j.1432-1327.1999.news99.x. http://www.chem.qmul.ac.uk/iubmb/newsletter/1999/item3.html.