தங்குதன் முச்சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன் முச்சல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன்(VI) சல்பைடு, திரிசு(சல்பேனைலிடின்)தங்குதன்
இனங்காட்டிகள்
12125-19-8
ChemSpider 9215149
EC number 235-734-2
InChI
  • InChI=1S/3S.W
    Key: YMZATHYBBBKECM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11039977
  • S=[W](=S)=S
பண்புகள்
WS3
வாய்ப்பாட்டு எடை 280.038 கி/மோல்
தோற்றம் பழுப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தங்குதன் முச்சல்பைடு (Tungsten trisulfide) என்பது தங்குதன் மற்றும் கந்தகம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது WS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. சாக்லேட்டு-பழுப்பு நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது.[1][2] The compound looks like chocolate-brown powder.[3][4]

தயாரிப்பு[தொகு]

1. தங்குதனேட்டுகளின் சூடான அமிலமயமாக்கப்பட்ட கரைசலில் ஐதரசன் சல்பைடு குமிழிகளை செலுத்தி இதை தயாரிக்கலாம்.[5]

2. தங்குதன் இருசல்பைடுடன் தனிமநிலை கந்தகத்தைச் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.:[6]

3.தயோதங்குதேட்டு சேர்மங்களின் கரைசல்களை அமிலமயமாக்கம் செய்தும் இதை வீழ்படிவாக்கலாம் [5]

இயற்பியல் பண்புகள்[தொகு]

குளிர்ந்த நீரில் சிறிது கரைகிறது. சூடான நீரில் கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது.

கார உலோக கார்பனேட்டுகள் மற்றும் கார உலோக ஐதராக்சைடுகளில் கரைகிறது.[3]

வேதிப் பண்புகள்[தொகு]

தங்குதன் முச்சல்பைடை சூடுபடுத்துவதால் சிதைவடைந்து தங்குதன் இருசல்பைடும் தனிமநிலை கந்தகமும் உருவாகின்றன:

சல்பைடு கரைசல்களுடன் இது வினைபுரிகிறது:

ஐதரசனுடன் சேர்க்கப்பட்டால் ஒடுக்க வினை நிகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Scott, Robert A.; Jacobson, Allan J.; Chianelli, Russ R.; Pan, W. H.; Stiefel, Edward I.; Hodgson, Keith O.; Cramer, Stephen P. (1 April 1986). "Reactions of molybdenum trisulfide, tungsten trisulfide, tungsten triselenide, and niobium triselenide with lithium. Metal cluster rearrangement revealed by EXAFS". Inorganic Chemistry 25 (9): 1461–1466. doi:10.1021/ic00229a032. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00229a032. பார்த்த நாள்: 1 November 2021. 
  2. Hille, Russ; Schulzke, Carola; Kirk, Martin L. (29 September 2016). Molybdenum and Tungsten Enzymes: Bioinorganic Chemistry (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78262-877-4. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  3. 3.0 3.1 Kirk-Othmer Concise Encyclopedia of Chemical Technology, 2 Volume Set (in ஆங்கிலம்). John Wiley & Sons. 16 July 2007. p. 1122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-04748-4. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  4. "Tungsten trisulfide" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  5. 5.0 5.1 Zelikman, A. N.; Krein, O. E.; Samsonov, G. V. (1966) [1964]. Belyaevskaya, L. V. (ed.). Metallurgiya redkikh metallov [Metallurgy of Rare Metals]. Israel Program for Scientific Translations. Translated by Aladjem, A. (2nd ed.). Jerusalem: S. Monson / Wiener Bindery. p. 7. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021 – via Google Books.
  6. "Tungsten Trisulfide-- Tungsten Trisulfide Professional Manufacturer and Supplier". tungsten-powder.com. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்_முச்சல்பைடு&oldid=3781770" இலிருந்து மீள்விக்கப்பட்டது