தங்குதன்(V) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(V)குளோரைடு
Tungsten(V) chloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன் ஐங்குளோரைடு
இனங்காட்டிகள்
13470-14-9 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139469
பண்புகள்
W2Cl10
வாய்ப்பாட்டு எடை 361.1 கி/மோல்
தோற்றம் கருப்புநிற படிகங்கள்
நீருறிஞ்சும்
அடர்த்தி 3.52 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை
கொதிநிலை 275.6 °C (528.1 °F; 548.8 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தங்குதன்(V) குளோரைடு (Tungsten(V) chloride) என்பது W2Cl10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் வெகுவாக அறியப்பட்ட மாலிப்டினம் ஐங்குளோரைடுடன் பலவகைகளிலும் ஒத்திருக்கிறது.

தயாரிப்பு[தொகு]

தங்குதன் அறுகுளோரைடை ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் தங்குதன்(V) குளோரைடைத் தயாரிக்கலாம். நாற்குளோரோயெத்திலீன் இவ்வினையில் ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது:[1]

2 WCl6 + C2Cl4 → W2Cl10 + C2Cl6.

நீலப் பச்சை திண்மப் பொருளான தங்குதன்(V) குளோரைடு வெற்றிடத்தில் எளிதாக ஆவியாகிறது. மேலும் இச்சேர்மம் முனைவற்ற கரைப்பான்களில் சிறிதளவு கரைகிறது. ஒரு ஆக்சிசன் வழங்கியாக இருப்பதால் இது லூயி காரத்துடன் அதிக வினைத்திறன் கொண்டதாக உள்ளது.

தங்குதன்(V) குளோரைடு இரு படி நிலைகளில் காணப்படுகிறது. ஒரு சோடி எண்முகவடிவ தங்குதன்(V) உலோக மையங்கள் இரண்டு குளோரின் ஈனிகளுடன் பாலம் அமைந்து இணைந்துள்ள அமைப்பில் அவை காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. E. L., McCann, III and T. M. Brown "Tungsten(V) Chloride" Inorganic Syntheses 1972, Volume XIII, pp. 150-154. எஆசு:10.1002/9780470132449.ch29
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(V)_குளோரைடு&oldid=2691109" இருந்து மீள்விக்கப்பட்டது