மாலிப்டினம் நாற்குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாலிப்டினம் நாற்குளோரைடு
| |
வேறு பெயர்கள்
மாலிப்டினம்(IV) குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13320-71-3 | |
பப்கெம் | 83340 |
பண்புகள் | |
Cl4Mo | |
வாய்ப்பாட்டு எடை | 237.752 g/mol |
தோற்றம் | கருப்புநிறத் திண்மம் |
உருகுநிலை | 552 °C (1,026 °F; 825 K) |
சிதைவடையும் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் நாற்குளோரைடு (Molybdenum tetrachloride) என்பது MoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம், பல்பகுதிய ("α") அமைப்பு , அறுபகுதிய ("β") அமைப்பு ஆகிய இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. ஆயினும், எந்த அமைப்பிலும் இச்சேர்மம் தாழ்நிலையை அடையாமல் எந்தக் கரைப்பானிலும் கரைவதில்லை. ஒவ்வொரு பல்லுருவ அமைப்பிலும், இரண்டு விளிம்புநிலை குளோரைடு ஈனிகள் மற்றும் நான்கு இரட்டைப்பால ஈனிகளுடன் மாலிப்டின மையங்கள் எண்முகவடிவில் இணைந்துள்ளன[1].
மாலிப்டினம் ஐங்குளோரைடை நாற்குளோரோயீத்தீன் பயன்படுத்தி குளோரின் நீக்கம் செய்து மாலிப்டினம் நாற்குளோரைடு தயாரிக்கப்படுகிறது:[2]
- 2 MoCl5 + C2Cl4 → 2 MoCl4 + C2Cl6.
இச்சேர்மத்தின் பல்திறன் வாய்ந்த அசெட்டோநைட்ரைல் கூட்டு விளைபொருளானது ஐங்குளோரைடில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது:[3]
- 2 MoCl5 + 5 CH3CN → 2 MoCl4(CH3CN)2 + ClCH2CN + HCl
MeCN ஈனிகளால் பிற ஈனிகளுடன் பரிமாற்றம் அடைய முடியும்.
- MoCl4(CH3CN)2 + 2 THF → MoCl4(THF)2 + 2 CH3CN
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ulrich Müller "Hexameric Molybdenum Tetrachloride" Angewandte Chemie International Edition in English 1981, Volume 20, Pages 692 - 693. எஆசு:10.1002/anie.198106921 10.1002/anie.198106921
- ↑ E. L. Mccann III, T. M. Brown "Molybpenum(IV) Chloride" Inorganic Syntheses 1970, volume 12, pages 181-186. எஆசு:10.1002/9780470132432.ch31
- ↑ Jonathan R. Dilworth, Raymond L. Richards "The Synthesis of Molybdenum and Tungsten Dinitrogen Complexes" Inorganic Syntheses 1990, volume 28, pages 33-43. எஆசு:10.1002/9780470132593 10.1002/9780470132593