மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு
இனங்காட்டிகள்
13637-68-8
InChI
  • InChI=1S/2ClH.Mo.2O/h2*1H;;;
    Key: ASLHVQCNFUOEEN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139520
SMILES
  • O=[Mo]=O.Cl.Cl
பண்புகள்
Cl2MoO2
வாய்ப்பாட்டு எடை 198.85 g·mol−1
தோற்றம் மஞ்சள் அல்லது பாலேடு போன்ற திண்மம்
உருகுநிலை 175 °C (347 °F; 448 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு (Molybdenum dichloride dioxide) என்பது MoO2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற மாலிப்டினம் சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் எதிர்காந்தப் பண்புடன் ஒரு திண்மப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு மாலிப்டினத்தின் அறியப்பட்டுள்ள பல ஆக்சிகுளோரைடுகளில் ஒன்றாகும்.

கட்டமைப்பு[தொகு]

வாயு நிலை மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடு மோனோமர் எனப்படும் ஒரு தனி மூலக்கூறு ஆகும்.[1] ஆனால் ஒடுக்கமடையும்போது ​​நிச்சயமற்ற கட்டமைப்பில் ஒருங்கிணைப்புப் பலபடியாக பலபடியாகிறது.

தயாரிப்பு[தொகு]

மாலிப்டினம் மூவாக்சைடுடன் அடர் ஐதரோகுளோரிக்கு அமிலத்தைச் சேர்த்து சூடாக்கினால் எளிதாக மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடை தயாரிக்க இயலும்:[2]

MoO3 + 2 HCl → MoO2Cl2 + H2O

மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு சேர்மத்திலிருந்தும் மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடை தயாரிக்க இயலும்:[3]

MoOCl4 + O(Si(CH3)3)2 → MoO2Cl2 + 2 ClSi(CH3)3

மாலிப்டினம் ஈராக்சைடு சேர்மத்தை குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்:[4]

MoO2 + Cl2 → MoO2Cl2

மாலிப்டினம் மூவாக்சைடை குளோரினேற்றம் செய்தும் மாலிப்டினம் இருகுளோரைடு ஈராக்சைடை தயாரிக்க முடியும்:[5]

MoO3 + Cl2 → MoO2Cl2

வினைகள்[தொகு]

MoO2Cl2(ஈதர்)2 வகையைச் சேர்ந்த பல பிசுகூட்டுசேர் பொருட்கள் அறியப்படுகின்றன. இந்த எண்முக மூலக்கூற்று அணைவுச் சேர்மங்கள் கரிம கரைப்பான்களில் கரைகின்றன.

பெரிய அனிலீன்களுடன் இச்சேர்மம் ஈரமிடோ அணைவுச் சேர்மமாக MoCl2(NAr)2(இருமெத்தாக்சியீத்தேன்) மாறுகிறது. இந்த அணைவுச் சேர்மம் சிராக் கார்பீன் எனப்படும் Mo(OR)2(NAr)(CH-t-Bu) வகை உலோகக் கார்பனுக்கு முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது.[4]

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

மாலிப்டினம் இருபுளோரைடு ஈராக்சைடு இதனுடன் தொடர்புடைய ஒரு சேர்மமாகும். இது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ward, Brian G.; Stafford, Fred E. (1968). "Synthesis and Structure of Four- and Five-Coordinated Gaseous Oxohalides of Molybdenum(VI) and Tungsten(VI)". Inorganic Chemistry 7 (12): 2569–2573. doi:10.1021/ic50070a020. 
  2. Francisco J. Arnaiz (1997). "Dichlorodioxobis(Dimethylsulphoxide)-Molybdenum(VI)". Dichlorodioxobis(Dimethylsulphoxide) Molybdenum(VI). Inorganic Syntheses. 31. பக். 246–7. doi:10.1002/9780470132623.ch39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13262-3. 
  3. Gibson, V. C.; Kee, T. P.; Shaw, A. (1988). "New, improved synthesis of the group 6 oxyhalides, W(O)Cl4, W(O)2Cl2 and Mo(O)2Cl2". Polyhedron 7 (7): 579–80. doi:10.1016/S0277-5387(00)86336-6. https://archive.org/details/sim_polyhedron_1988_7_7/page/579. 
  4. 4.0 4.1 Schrock, R. R.; Murdzek, J. S.; Bazan, G. C.; Robbins, J.; DiMare, M.; O'Regan, M. (1990). "Synthesis of molybdenum imido alkylidene complexes and some Reactions Involving Acyclic Olefins". Journal of the American Chemical Society 112 (10): 3875–3886. doi:10.1021/ja00166a023. 
  5. Takahashi, Hideyuki (14 January 2021). "Method of producing high bulk density molybdenum oxychloride".