மாலிப்டினம் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம் ஈராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாலிப்டினம்(IV) ஆக்சைடு
வேறு பெயர்கள்
மாலிப்டினம் டையாக்சைடு
இனங்காட்டிகள்
18868-43-4 Y
பப்கெம் 29320
பண்புகள்
MoO2
வாய்ப்பாட்டு எடை 127.94 கி/மோல்
தோற்றம் பழுப்பும் ஊதாவும் கலந்த திண்மம்
அடர்த்தி 6.47 கி/செ.மீ3
உருகுநிலை 1,100 °C (2,010 °F; 1,370 K) சிதைவடையும்
கரையாது
கரைதிறன் காரம், HCl, HF இவற்றில் கரையாது.
H2SO4 இல் சிறிதளவு கரையும்
+41.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு உருக்குலைந்த உரூத்தைல் (நான்முகம்)
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (MoIV); முக்கோணம் (O−II)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாலிப்டினம் டை சல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(IV) ஆக்சைடு
தங்குதன்(IV) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மாலிப்டினம் ஈராக்சைடு (Molybdenum dioxide) என்பது MoO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். மாலிப்டினம் டையாக்சைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஊதா நிற திண்மமான இச்சேர்மம் ஓர் உலோகக் கடத்தியாகும். ஒற்றைச்சரிவு செல்லில் படிகமாகும் மாலிப்டினம் ஈராக்சைடு, உருக்குலைந்த உரூத்தைல் (TiO2) படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தைட்டானியம் டை ஆக்சைடில் (TiO2) ஆக்சைடு எதிர்மின் அயனிகள் நெருங்கிப் பொதிந்துள்ளன. தைட்டானியம் அணுக்கள் பாதிக்கு மேலான எண்முக துகள்வெளிகளை ஆக்ரமித்துள்ளன. மாங்கனீசு டை ஆக்சைடில் (MoO2) எண்முகங்கள் உருக்குலைந்துள்ளன. மாலிப்டினம் அணுக்கள் மையத்தில் இருப்பதில்லை. அவை Mo – Mo இடைவெளியை குறைவு நீளமென நிலைமாற்றிக் கொள்ளவும் Mo – Mo பிணைப்புக்கும் முனைகின்றன. குட்டையான Mo – Mo இடைவெளி 251 பைக்கோமீட்டர் ஆகும். இது உலோகத்திலுள்ள Mo – Mo 272.5 பைக்கோமீட்டர் என்ற இடைவெளியைவிடக் குறைவு ஆகும். ஓர் ஒற்றைப் பிணைப்புக்கு எதிர்நோக்கும் தேவையான பிணைப்பு நீளத்திற்கு இது குறைவாகும். பிணைப்பு சிக்கலானதாகவும் சில மாலிப்டின எலக்ட்ரான்கள் கடத்தல் பட்டையில் உள்ளடங்காமல் உலோகக் கடத்துத் திறனில் பங்கு கொள்கின்றன.

தயாரிப்பு[தொகு]

  • மாலிப்டினம் மூவாக்சைடுடன் மாலிப்டினத்தைச் சேர்த்து 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் 70 மணி நேரம் வினைப்படுத்தினால் ஒடுக்க வினை நிகழ்ந்து மாலிப்டினம் ஈராக்சைடு உருவாகிறது. ஒத்த வரிசையில் அமைந்த தங்குதன்(iV) ஆக்சைடும் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது.

2 MoO3 + Mo → 3 MoO2

  • MoO3 உடன் H2 அல்லது NH3 வை 470 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழாக ஒடுக்கும் வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம்.

அயோடினைப் பயன்படுத்தி மாலிப்டின ஈராக்சைடின் ஒற்றைப் படிகங்களை உருவாக்கலாம். அயோடின் மாலிப்டின ஈராக்சைடினை மறுதலையாக ஆவியாகும் வேதியினமான MoO2I2 ஆக மாற்றுகிறது [1].

மாலிப்டினம் ஆக்சைடு தொழில்நுட்ப மாலிடினம் ஆக்சைடின் ஆக்கக் கூறாக உள்ளது. MoS2:வைத் தயாரிக்கும் தொழிற்சாலை செயன்முறையில் தொழில்நுட்ப மாலிப்டினம் ஆக்சைடு உருவாகிறது [2][3].

2 MoS2 + 7O2 → 2MoO3 + 4SO2 MoS2 + 6MoO3 → 7MoO2 + 2SO2 2 MoO2 + O2 → 2MoO3

MoO2 ஆல்ககால்களில் ஐதரசன் நீக்கம் செய்கிறது [4]. ஐதரோகார்பன்களை மீள் உருவாகம் [5] செய்கிறது. உயிரிடீசலாகவும் பயன்படுகிரது [6]. கிராபைட்டு மீது இதைப் படிய வைத்து மாலிப்டினம் மீநுண் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன [7].

இச்சேர்மத்தின் கனிமவியல் வடிவம் துகாரினோவிட் அரிதாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Conroy, L. E.; Ben-Dor, L. "Molybdenum(IV) Oxide and Tungsten(IV) Oxides Single-Crystals" Inorganic Syntheses 1995, volume 30, pp. 105–107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-30508-1
  2. Metallurgical furnaces Jorg Grzella, Peter Sturm, Joachim Kruger, Markus A. Reuter, Carina Kogler, Thomas Probst, Ullmans Encyclopedia of Industrial Chemistry
  3. "Thermal Analysis and Kinetics of Oxidation of Molybdenum Sulfides" Y. Shigegaki, S.K. Basu, M.Wakihara and M. Taniguchi, J. Therm. Analysis 34 (1988), 1427-1440
  4. A. A. Balandin and I. D. Rozhdestvenskaya, Russian Chemical Bulletin, 8, 11, (1959), 1573 எஆசு:10.1007/BF00914749
  5. A. A. Balandin and I. D. Rozhdestvenskaya, Russian Chemical Bulletin, 8, 11, (1959), 1573 எஆசு:10.1007/BF00914749
  6. Catalytic partial oxidation of a biodiesel surrogate over molybdenum dioxide, C.M. Cuba-Torres, et al, Fuel (2015), எஆசு:10.1016/j.fuel.2015.01.003
  7. Synthesis of Molybdenum Nanowires with Millimeter-Scale Lengths Using Electrochemical Step Edge Decoration M. P. Zach, K. Inazu, K. H. Ng, J. C. Hemminger, and R. M. Penner Chem. Mater. (2002),14, 3206 எஆசு:10.1021/cm020249a
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்_ஈராக்சைடு&oldid=3968150" இலிருந்து மீள்விக்கப்பட்டது