உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிப்டினம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம்(II) அயோடைடு
இனங்காட்டிகள்
14055-74-4 Y
EC number 692-029-6
InChI
  • InChI=1S/2HI.Mo/h2*1H;/q;;+2/p-2
    Key: NPQZRYZJQWFZNG-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6432098
  • [I-].[I-].[Mo+2]
பண்புகள்
I2Mo
வாய்ப்பாட்டு எடை 349.76 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்[1]
அடர்த்தி 5.278 கி·செ.மீ−3
உருகுநிலை 730 °C (1,350 °F; 1,000 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாலிப்டினம்(II) குளோரைடு
மாலிப்டினம்(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(II) அயோடைடு
தங்குதன்(II) அயோடைடு]]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாலிப்டினம்(II) அயோடைடு (Molybdenum(II) iodide) என்பது MoI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். மாலிப்டினத்தின் அயோடைடு உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

மாலிப்டினம்(II) புரோமைடு மற்றும் இலித்தியம் அயோடைடு சேர்மங்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாலிப்டினம்(II) அயோடைடு உருவாகும்:[1]

[Mo6Br8]Br4 + 12 LiI → [Mo6I8]I4 + 12 LiBr

மாலிப்டினம்(III) அயோடைடு சேர்மத்தை 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தி சிதைவு வினைக்கு உட்படுத்தினாலும் மாலிப்டினம்(II) அயோடைடு உருவாகும்:[1]

6MoI3 → [Mo6I8]I4 + 3I2

பண்புகள்[தொகு]

மாலிப்டினம்(II) அயோடைடு காற்றில் நிலையாக இருக்கும். கருப்பு நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. முனைவுற்ற மற்றும் முனைவற்ற கரைப்பான்களில் இது கரையாது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Georg Brauer (Hrsg.) u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band III, Ferdinand Enke, Stuttgart 1981, ISBN 3-432-87823-0, S. 1539.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்(II)_அயோடைடு&oldid=3968144" இலிருந்து மீள்விக்கப்பட்டது