மாலிப்டினம் மூவாக்சைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மாலிப்டினம் டிரையாக்சைடு
| |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
1313-27-5 | |||
பப்கெம் | 14802 | ||
பண்புகள் | |||
MoO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 143.95 g·mol−1 | ||
தோற்றம் | மஞ்சள் அல்லது இளம் நீலத் திண்மம் | ||
மணம் | நெடியற்றது | ||
அடர்த்தி | 4.69 கி/செ.மீ3, திண்மம் | ||
உருகுநிலை | 795 °C (1,463 °F; 1,068 K) | ||
கொதிநிலை | 1,155 °C (2,111 °F; 1,428 K) பதங்கமாகும் | ||
0.1066 கி/100 மி.லி (18 °செ) 0.490 கி/100 மி.லி (28 °செ) 2.055 கி/100 மி.லி (70 °செ) | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | சாய்சதுரம் | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
see text | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−745.17 கியூ/மோல் | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
77.78 யூ கெ−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | Carc. Cat. 3 Harmful (Xn) Irritant (Xi) | ||
R-சொற்றொடர்கள் | R36/37, R40 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S22, S36/37 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில்தீ ப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம் மூவாக்சைடு தங்குதன் மூவாக்சைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மாலிப்டினம் மூவாக்சைடு (Molybdenum trioxide) என்பது MoO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், எந்தவொரு மாலிப்டினம் சேர்மத்திலிருந்தும் மாலிப்டினம் மூவாக்சைடை பெருமளவில் தயாரிக்க முடியும். ஆக்சிசனேற்ற வினையூக்கியாகச் செயற்படுவது இச்சேர்மத்தினுடைய முதன்மையான பயன்பாடு ஆகும். மேலும் பிற மாலிப்டினம் சேர்மங்களைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.
மாலிப்டினம் மூவாக்சைடில் மாலிப்டினம் +6 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.
கட்டமைப்பு
[தொகு]வாயுநிலை, மாலிப்டினம் மூவாக்சைடில் மைய மாலிப்டினம் அணுவுடன் மூன்று ஆக்சிசன் அணுக்கள் இரட்டைப் பிணைப்பால் பிணைந்துள்ளன. திண்மநிலையில், நீரற்ற MoO3 சேர்மமானது சாய்சதுரப் படிகத்தில் உருத்திரிந்த MoO6 எண்முகங்களைக் கொண்டுள்ளது. விளிம்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் எண்முகங்கள் சங்கிலிகளாக உருவாகின்றன. இச்சங்கிலிகள் ஆக்சிசன் அணுக்களுடன் குறுக்கில் பிணைந்து அடுக்குகளை உருவாக்குகின்றன. ஒரு மாலிப்டினம் – ஆக்சிசன் பிணைப்பு குறைவாக உள்ள பிணைக்கப்படாத ஆக்சிசன் எண்முகத்தில் உள்ளது. [1]
தயாரிப்பு
[தொகு]முதன்மைத் தாதுவான மாலிப்டினம் இரு சல்பைடை காற்றில் வறுப்பதன் மூலம் மாலிப்டினம் மூவாக்சைடு தொழில்முறையில் தயாரிக்கப்படுகிறது.
2 MoS2 + 7 O2 → 2 MoO3 + 4 SO2
நீரிய சோடியம் மாலிப்டேட்டு கரைசலுடன் பெர்குளோரிக் அமிலத்தை சேர்த்து அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தி ஆய்வகங்களில் மாலிப்டினம் மூவாக்சைடு தயாரிக்கப்படுகிறது. :[2]
Na2MoO4 + H2O + 2 HClO4 → MoO3(H2O)2 + 2 NaClO4
இவ்வினையில் உருவாகும் இருநீரேற்று விரைவாக நீரை இழந்து ஒருநீரேற்று வடிவ மாலிப்டினம் மூவாக்சைடு உருவாகிறது. இவ்விரண்டு நீரேற்றுகளும் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
தண்ணீரில் மாலிப்டினம் மூவாக்சைடு சிறிதளவு கரைந்து மாலிப்டிக் அமிலத்தைத் தருகிறது. காரங்களுடன் சேர்ந்து மாலிப்டேட்டு எதிர்மின் அயனியை தருகின்ற நிலையிலில் மாலிப்டினம் மூவாக்சைடு இருக்கிறது.
பயன்கள்
[தொகு]பெருமளவில் மாலிப்டினம் உலோகத்தைத் தயாரிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது. அரிமானத்தைத் தடுப்பதற்காக எஃகுடன் சேர்த்து கலப்புலோகம் தயாரிப்பதற்கு மாலிப்டினம் பெரிதும் உதவுகிறது. மாலிப்டினம் மூவாக்சைடுடன் ஐதரசன் சேர்த்து உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது மாலிப்டினம் உலோகம் கிடைக்கிறது.
MoO3 + 3 H2 → Mo + 3 H2O
தொழிற்சாலைகளில் புரப்பீன் மற்றும் அமோனியாவை ஆக்சிசனேற்றம் செய்து அக்ரைலோநைட்ரைல் தயாரிக்கையில் மாலிப்டினம் மூவாக்சைடு இணை வினையூக்கியாக செயல்படுகிறது.
அடுக்குக் கட்டமைப்பு மற்றும் Mo(VI)/Mo(V) இனச்சேர்க்கை எளிமை காரணமாக மாலிப்டினம் மூவாக்சைடு மின்வேதியியல் கருவிகள் மற்றும் மின்வேதியியல் வெளிப்பாடுகளில் பயன்படுகிறது [3]. பல்படிமங்களில் ஒரு வலிமையான நுண்ணுயிர் எதிர்ப்பு முகவராகவும் மாலிப்டினம் மூவாக்சைடு பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீருடன் தொடர்பு கொள்ள நேரும்போது H+ அயனிகளை உருவாக்கி பாக்டீரியாக்களை அழிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ Heynes, J. B. B.; Cruywagen, J. J. (1986). Yellow Molybdenum(VI) Oxide Dihydrate Inorganic Syntheses. Vol. 24. p. 191. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132555.ch56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-83441-6.
- ↑ Ferreira, F. F.; Souza Cruz, T. G.; Fantini, M. C. A.; Tabacniks, M. H.; de Castro, S. C.; Morais, J.; de Siervo, A.; Landers, R. et al. (2000). "Lithium insertion and electrochromism in polycrystalline molybdenum oxide films". Solid State Ionics 136–137: 357. doi:10.1016/S0167-2738(00)00483-5.
- ↑ Zollfrank, Cordt; Gutbrod, Kai; Wechsler, Peter; Guggenbichler, Josef Peter (2012). "Antimicrobial activity of transition metal acid MoO3 prevents microbial growth on material surfaces". Materials Science and Engineering: C 32: 47. doi:10.1016/j.msec.2011.09.010.
புற இணைப்புகள்
[தொகு]- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- U.S. Department of Health and Human Services National Toxicology Program
- International Molybdenum Association பரணிடப்பட்டது 2011-07-04 at the வந்தவழி இயந்திரம்
- Los Alamos National Laboratory - Molybdenum