மாலிப்டினம் அறுபுளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
மாலிப்டினம்(VI) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
மாலிப்டினம் அறுபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-77-9 | |
EC number | 232-026-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82219 |
| |
பண்புகள் | |
MoF6 | |
வாய்ப்பாட்டு எடை | 209.93 கி/மோல் |
தோற்றம் | வெண்படிகங்கள்[1] or colorless liquid நீருறிஞ்சும் |
அடர்த்தி | 3.50 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 17.5 °C (63.5 °F; 290.6 K)[1] |
கொதிநிலை | 34.0 °C (93.2 °F; 307.1 K)[1] |
நீராற்பகுப்பு அடைகிறது. | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், oP28 |
புறவெளித் தொகுதி | Pnma, No. 62 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் (Oh) |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | தங்குதன் அறுபுளோரைடு யுரேனியம் அறுபுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் அறுபுளோரைடு (Molybdenum hexafluoride) என்பது MoF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், நிறமற்ற திண்மமாக காணப்படும் இச்சேர்மம் அறைவெப்பநிலைக்குச் சற்றுக் கீழான வெப்ப நிலையிலேயே உருகத்தொடங்குகிறது. மாலிப்டினத்தின் உயர்நிலை புளோரைடான இது நீராற்பகுப்பு வினையில் நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது. அறியப்பட்டுள்ள 17 இருபடி அறுபுளோரைடுகளில் மாலிப்டினம் அறுபுளோரைடும் ஒன்றாகும்.
தயாரிப்பு
[தொகு]மாலிப்டினம் உலோகம் அதிகப்படியான புளோரின் வாயுவுடன் நேரடியாக வினைபுரிந்து மாலிப்டினம் அறுபுளோரைடு உருவாகிறது.[2]
- Mo + 3 F2 → MoF6
MoO2F2 மற்றும் MoOF4 ஆகியன குறிப்பிடத்தக்க மாசுக்களாக இதனுடன் கலந்துள்ளன.[3]
வினைகள்
[தொகு]மாலிப்டினம் அறுபுளோரைடு அறை வெப்பநிலையில் திரவநிலையில் காணப்படுகிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் மாலிப்டினம் ஆக்சைடுகளைத் தருகிறது.[1]
வடிவமைப்பு
[தொகு]−140 ° செ வெப்பநிலையில் மாலிப்டினம் அறுபுளோரைடு இடக்குழு Pnma உடன் சாய்சதுர வடிவமைப்பில் படிகமாகிறது. மேலும் a = 9.394 Å, b = 8.543 Å, and c = 4.959 Å என்ற அணிக்கோவை அளபுரு மதிப்புகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு அலகு கூட்டிலும் நான்கு வாய்ப்பாட்டு அலகுகள் காணப்படுவதால் மாலிப்டினம் அறுபுளோரைடின் அடர்த்தி 3.50 கி•செ,மீ−3 ஆகும்.[2] அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பில் புளோரின் அணுக்கள் நிரப்பப்பட்டுள்ளன.[4]
திரவ மற்றும் வாயு நிலைகளில் MoF6 சேர்மமானது புள்ளித் தொகுதி Oh உடன் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பைப் பெற்றுள்ளது. Mo–F பிணைப்பு இடைவெளி 1.817 Å. ஆகும்.
பயன்கள்
[தொகு]அணு மின் நிலையங்களில் யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது விளைபொருளாக மாலிப்டினம் இருப்பதால், மாலிப்டினம் அறுபுளோரைடு ஒரு மாசாக யுரேனியம் அறுபுளோரைடில் கலந்துள்ளது. இவ்வாறே குறைகடத்தி தொழிற்சாலைகளில் பயன்படும் தங்குதன் அறுபுளோரைடிலும் இதுவொரு மாசாகக் கலந்துள்ளது. மிதமாக உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் WF6-MoF6 கலவையைக் கொண்டு மாலிப்டினம் உட்பட எண்ணற்ற தனிமங்களில் இருந்து MoF6 சேர்மத்தை நீக்க முடியும்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 CRC Handbook of Chemistry and Physics, 90th Edition, CRC Press, Boca Raton, Florida, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9084-0, Section 4, Physical Constants of Inorganic Compounds, p. 4-85.
- ↑ 2.0 2.1 2.2 T. Drews, J. Supeł, A. Hagenbach, K. Seppelt: "Solid State Molecular Structures of Transition Metal Hexafluorides", in: Inorganic Chemistry, 2006, 45 (9), S. 3782–3788; எஆசு:10.1021/ic052029f; PubMed
- ↑ W. Kwasnik "Molybdenum(VI) Fluoride" Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 259.
- ↑ J. H. Levy, J. C Taylor, A. B. Waugh: "Neutron Powder Structural Studies of UF6, MoF6 and WF6 at 77 K", in: Journal of Fluorine Chemistry, 1983, 23 (1), pp. 29–36; எஆசு:10.1016/S0022-1139(00)81276-2.
- ↑ US-Patent 5234679: Method of Refining Tungsten Hexafluoride Containing Molybdenum Hexafluoride as an Impurity பரணிடப்பட்டது 2011-06-12 at the வந்தவழி இயந்திரம், 10 August 1993.
- ↑ US-Patent 6896866: Method for Purification of Tungsten Hexafluoride பரணிடப்பட்டது 2011-06-12 at the வந்தவழி இயந்திரம், 24 May 2005.