பொலோனியம் நாற்குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொலோனியம் நாற்குளோரைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் நாற்குளோரைடு
இனங்காட்டிகள்
10026-02-5
ChemSpider 4896024?
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
PoCl4
வாய்ப்பாட்டு எடை 350.79 கி/மோல்
தோற்றம் அடர் மஞ்சள்நிறப் படிகத் திண்மம் [1]
உருகுநிலை
கொதிநிலை 390 °C (734 °F; 663 K)
கரையும், ஆனால் மிகமெதுவாக நீராற்பகுப்பு அடையும்
கரைதிறன் ஐதரோகுளோரிக் அமிலத்தில் மற்றும் தையோனைல் குளோரைடில் நன்றாகக் கரையும், எத்தனால் மற்றும் அசெட்டோன் ஆகியவறில் மிதமாகக் கரையும்,நைட்ரிக் அமிலத்தில் சிதைவடையும்.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொலோனியம் நாற்குளோரைடு (Polonium tetrachloride) என்பது PoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு [[கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இச்சேர்மம் அடர் மஞ்சள் நிறப் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்ட இச்சேர்மம், செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போல 200° செ வெப்பநிலைக்கு மேல் பொலோனியம் இருகுளோரைடு மற்றும் அதிகளவு குளோரின் எனச் சிதைவடைகிறது[1].

அமைப்பு[தொகு]

பொலோனியம் நாற்குளோரைடானது ஒற்றைச்சரிவு அல்லது முச்சரிவு படிக அமைப்பில் காணப்படுகிறது.

தோற்றம்[தொகு]

அறை வெப்பநிலையில் பொலோனியம் நாற்குளோரைடு அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனுடைய உருகுநிலையான 300° செல்சியசு வெப்பநிலையில் வைக்கோல் நிற மஞ்சளாகவும் கொதிநிலையான390° செல்சியசு வெப்பநிலையில் நல்ல சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. இச்சேர்மத்தின் ஆவியானது 500° செல்சியசு வெப்பநிலை வரை பழுப்பு நிறமாகவும் அதற்கு மேல் நீலம் மற்றும் பச்சை நிறத்திற்கும் மாறுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

பொலோனியம் நாற்குளோரைடு பினவருமாறு தயாரிக்கப்படுகிறது.

  • பொலோனியம் உலோகத்தை ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைப்பதால் உருவாகிறது.
  • பொலோனியம் உலோகத்தை உலர் குளோரின் ஆவியுடன் 200° செல்சியசு [[வெப்பநிலைக்குச் சூடாக்குவதால் உருவாகிறது.

பொலோனியம் வேதியியல்[தொகு]

இரு மோல்கள் முப்பியூட்டைல் பாசுபேட்டுடன் பொலோனியம் நாற்குளோரைடு சேர்ந்தால் அணைவுச் சேர்மம் உருவாகிறது.

செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போலவே பொலோனியம் நாற்குளோரைடும் PoCl
5
and PoCl2−
6
ஆலசன் அணைவுச் சேர்மங்களாக உருவ்வகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, ISBN 0-12-352651-5