பொலோனியம் ஓராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோனியம் ஓராக்சைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் ஓராக்சைடு
பண்புகள்
PoO
வாய்ப்பாட்டு எடை 224.98 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறத்திண்மம்[1][2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொலோனியம் ஓராக்சைடு (Polonium monoxide, "பொலோனியம் மொனாக்சைடு") அல்லது பொலோனியம்(II) ஆக்சைடு (polonium(II) oxide) என்பது PoO என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும். பொலோனியம் தனிமம் உருவாக்கும் மூன்று ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். பொலோனியம் ஈராக்சைடு (PoO2) மற்றும் பொலோனியம் மூவாக்சைடு (PoO3) என்பவை பிற இரண்டு ஆக்சைடுகள் ஆகும். பொலோனியம் ஓராக்சைடு ஒரு இடைசால்கோசென்சு வகைச் சேர்மமாகும்.

தோற்றமும் தயாரிப்பும்[தொகு]

பொலோனியம் ஓராக்சைடு கருப்பு நிறத் திண்மமாகக் காணப்படுகிறது. பொலோனியம் சல்பைடு (PoSO3) மற்றும் பொலோனியம் செலினைடு (PoSeO3) ஆகியவற்றை கதிர்வீச்சுப் பகுப்புக்கு உட்படுத்தும் போது பொலோனியம் ஓராக்சைடு உருவாகிறது.[1][2]

வேதிப் பண்புகள்[தொகு]

காற்று அல்லது நீருடன் தொடர்பு கொள்ளும் போது பொலோனியம் ஓராக்சைடு மற்றும் இதனுடன் தொடர்புடைய பொலோனியம்(II) ஐதராக்சைடு (Po(OH)2) ஆகியன விரைவாக பொலோனியம்(IV)[2] ஆக ஆக்சிசனேற்றம் அடைகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, ISBN 0-12-352651-5
  2. 2.0 2.1 2.2 2.3 Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. பக். 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236046. http://www.google.com/books?id=8qePsa3V8GQC. பார்த்த நாள்: June 15, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலோனியம்_ஓராக்சைடு&oldid=2052697" இலிருந்து மீள்விக்கப்பட்டது