பொலோனியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோனியம் சல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொலோனியம் மோனோசல்பைடு[1]
இனங்காட்டிகள்
19268-62-3
பண்புகள்
PoS
வாய்ப்பாட்டு எடை 241.07 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
உருகுநிலை 500 °C (932 °F; 773 K)
கரையாது[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பொலோனியம் சல்பைடு (Polonium sulfide) PoS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொலோனியமும் கந்தகமும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது.[3] கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் சல்பைடு கதிரியக்கப் பண்பு கொண்டதாகும்.[4][5]

தயாரிப்பு[தொகு]

1. பொலோனியம்(II) உப்புகளின் அமைலக் கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் பொலோனியம் சல்பைடு உருவாகிறது:[6][7]

2. அமோனியம் சல்பைடின் நீரியக் கரைசலுடன் பொலோனியம்(II) ஐதராக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொலோனியம் சல்பைடு கிடைக்கிறது:

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் சல்பைடு தண்ணீரில், எத்தனால், அசிட்டோன், தொலுயீன், அமோனியம் சல்பைடு போன்ற கரைப்பான்களில் கரையாது.

வேதிப்பண்புகள்[தொகு]

பொலோனியம் சல்பைடு வலுவான குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. குளோரின் நீர், புரோமின் நீர், சோடியம் ஐப்போகுளோரைட்டு மற்றும் இராச திராவகம் போன்ற வேதிப் பொருள்களால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. பொலோனியம் சல்பைடு வெப்பமாக்கினால் சிதைகிறது. வெற்றிடத்தில் 274.85°செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது தனிம பொலோனியம், தனிம கந்தகமாக சிதைகிறது:[8]

அடர் அமிலங்களுடன் கீழ்கண்டவாறு வினையில் ஈடுபடுகிறது:

மேற்கோள்கள்[தொகு]

  1. "polonium | Definition, Symbol, Properties, Uses, & Facts" (in en). https://www.britannica.com/science/polonium. 
  2. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010) (in en). The Aqueous Chemistry of the Elements. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-539335-4. https://www.google.ru/books/edition/The_Aqueous_Chemistry_of_the_Elements/-oI8DwAAQBAJ?hl=en&gbpv=1&dq=Polonium+sulfide+PoS&pg=PA243&printsec=frontcover. 
  3. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3779. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://www.google.ru/books/edition/Dictionary_of_Inorganic_Compounds/9eJvoNCSCRMC?hl=en&gbpv=1&dq=Polonium+sulfide+PoS&pg=PA3779&printsec=frontcover. பார்த்த நாள்: 2 November 2021. 
  4. Sergeevа, V. I.; Stepanova, N. Yu.; Savenko, A. V.; Sapozhnikov, Yu. A. (2015). "Use of Iron Sulfide for Removing Polonium from Liquid Radioactive Waste". Radiochemistry 57 (5): 534–536. doi:10.1134/S1066362215050148. https://istina.msu.ru/download/10702342/1gdyYu:rGRfA8vK1MsZtub1PT_rZq-gIYY/. பார்த்த நாள்: 2 November 2021. 
  5. "Polonium - an overview | ScienceDirect Topics". sciencedirect.com. https://www.sciencedirect.com/topics/chemistry/polonium. 
  6. Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001) (in en). Inorganic Chemistry. Academic Press. பக். 594. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-352651-9. https://books.google.com/books?id=Mtth5g59dEIC&dq=Polonium+sulfide+PoS&pg=PA594. பார்த்த நாள்: 2 November 2021. 
  7. Considine, Douglas M.; Considine, Glenn D. (11 December 2013) (in en). Van Nostrand's Scientific Encyclopedia. Springer Science & Business Media. பக். 2503. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4757-6918-0. https://www.google.ru/books/edition/Van_Nostrand_s_Scientific_Encyclopedia/t4jjBwAAQBAJ?hl=en&gbpv=1&dq=Polonium+sulfide+PoS&pg=PA2503&printsec=frontcover. பார்த்த நாள்: 2 November 2021. 
  8. Brown, Susan A.; Brown, Paul L. (25 September 2019) (in en). The Aqueous Chemistry of Polonium and the Practical Application of its Thermochemistry. Elsevier. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-819309-9. https://books.google.com/books?id=eTqvDwAAQBAJ&dq=Polonium+sulfide+PoS&pg=PA10. பார்த்த நாள்: 2 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலோனியம்_சல்பைடு&oldid=3384685" இருந்து மீள்விக்கப்பட்டது