சிர்க்கோனியம்(III) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சிர்க்கோனியம் முக்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10241-03-9 | |
ChemSpider | 127679 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 144719 |
| |
பண்புகள் | |
Cl3Zr | |
வாய்ப்பாட்டு எடை | 197.57 g·mol−1 |
தோற்றம் | Blue-black crystals |
அடர்த்தி | 3.05 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 627 °C (1,161 °F; 900 K) 760 மி.மீபாதரசம் இல்[1] |
வினைபுரியும்[1] | |
கரைதிறன் | பீனைல், CS2 களில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP6[2] |
புறவெளித் தொகுதி | P63/mcm, No. 193[2] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−714.21 கியூ/மோல்l[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
145.79 யூ/மோல்·கெ[3] |
வெப்பக் கொண்மை, C | 96.21 யூ/மோல்·கெ[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியம்(III) குளோரைடு (Zirconium(III) chloride) என்பது ZrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். கருநீல நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் காற்றில் அதிக உணர்திறனுடன் வினைபுரிகிறது.
தயாரிப்பு
[தொகு]சிர்க்கோனியம் நாற்குளோரைடை அலுமினியம் சேர்த்து குறைத்தல் வழியாக சிர்க்கோனியம்(III) குளோரைடு தயாரிக்கப்பட்டது. மாசு கலந்த இச்சேர்மத்தை ஓட்டோ ரஃப் மற்றும் வால்சுடீன் ஆகியோர் தயாரித்தனர்.[4] அடுத்து அலுமினியம் பயன்படுத்துவதால் உண்டாகும் மாசுக்கள் பிரச்சினை, ஒடுக்க வினைக்கு சிர்க்கோனியம் உலோகத்தைப் பயன்படுத்துவதால் நீக்கப்பட்டது.[5]
- Zr + 3 ZrCl4 → 4 ZrCl3
அலுமினியத்தை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் சேர்த்து ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தினால், வினையில் தொடர்ச்சியாக குளோரோவலுமினேட்டுகள் உருவாகின்றன.உதாரணமாக[Zr(AlCl4)2(AlCl4)2] and Zr(AlCl4)3.[6]
சிர்க்கோனியம் முக்குளோரைடு போன்ற மூவாலைடுகள் ஒப்பீட்டளவில் எளிதில் ஆவியாவதில்லை. இதனால் வாயுநிலை ஆக்சிசன் ஒடுக்கியைச் சேர்ப்பதால் இம்மாசுச் சீர்கேட்டை தவிர்க்கலாம். உதாரணமாக, சிர்க்கோனியம் முக்குளோரைடை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் ஐதரசன் வாயுவைச் சேர்ப்பதன் மூலம் ஒடுக்க வினையில் தயாரிக்க முடியும்.[7]
- ZrCl4 + ½ H2 → ZrCl3 + HCl
கட்டமைப்பு
[தொகு]சில சிர்க்கோனியம் ஆலைடுகள் (ZrCl3, ZrBr3, and ZrI3) HfI3 சேர்மத்தை ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஒரே மாதிரியான இடக்குழு (P63 / MCM) மற்றும் அலகில் 2 மூலக்கூறு அறுங்கோண அமைப்பையும் பெற்றுள்ளன. சிர்க்கோனியம் முக்குளோரைடின் காந்த ஏற்புத்திறன் ஒவ்வொரு Zr(III) மையத்தின் மீதும் இணையில்லா எலக்ட்ரான்களின் உலோக - உலோக இடைவினைகளை பரிந்துரைக்கிறது. ZrCl3 இன் காந்த திருப்புத் திறன் மதிப்பு (0.4 போர் மக்னட்டான்) உலோக ஆர்பிட்டால்களின் கணிசமான மேற்படிதலைக் குறிக்கிறது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ 2.0 2.1 2.2 Douglas, Bodie E.; Ho, Shih-Ming (2007). Structure and Chemistry of Crystalline Solids. New York: Springer Science+Business Media, Inc. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-26147-8.
- ↑ 3.0 3.1 3.2 Zirconium chloride in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-06-23)
- ↑ Ruff, Otto; Wallstein, Richard (1923). "Reduktion anorganischer Halogenide III.1) Die Reduktion des Zirkontetrachlorids". Zeitschrift für anorganische und allgemeine Chemie 128: 96. doi:10.1002/zaac.19231280110.
- ↑ Hoffman, David M.; Lee, Samkeun (1992). "Synthesis of pyridine complexes of zirconium(III) chloride and the apparent oxidation to zirconium(IV) by a nitrile". Inorganic Chemistry 31 (13): 2675. doi:10.1021/ic00039a002.
- ↑ Larsen, E. M.; Moyer, James W.; Gil-Arnao, Francisco.; Camp, Michael J. (1974). "Synthesis of crystalline zirconium trihalides by reduction of tetrahalides in molten aluminum halides. Nonreduction of hafnium". Inorganic Chemistry 13 (3): 574. doi:10.1021/ic50133a015.
- ↑ Newnham, I. E.; Watts, J. A. (1960). "The Preparation of the Anhydrous Zirconium Trihalides". Journal of the American Chemical Society 82 (9): 2113. doi:10.1021/ja01494a006.