ஓசுமியம் நாற்குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஓசுமியம்(IV) குளோரைடு
| |
வேறு பெயர்கள்
ஓசுமியம் குளோரைடு, ஓசுமியம் நாற்குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10026-01-4 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4070891 |
| |
பண்புகள் | |
OsCl4 | |
வாய்ப்பாட்டு எடை | 332.041 கி/மோல் |
தோற்றம் | கருஞ்சிவப்பு நேர்சாய்சதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 4.38 கி/செ.மீ³ |
உருகுநிலை | 323°செ இல் சிதைகிறது. |
தண்ணீருடன் வினைபுரிகிறது | |
கரைதிறன் | ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம், oS10 |
புறவெளித் தொகுதி | Cmmm, No. 65 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஓசுமியம்(IV) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(III) குளோரைடு ருத்தீனியம்(III) குளோரைடு ஓசுமியம்(III) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓசுமியம் நாற்குளோரைடு (Osmium(IV) chloride or osmium tetrachloride) என்பது OsCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இரண்டு பல்லுருவ படிக அமைப்புகளில் காணப்படுகிறது. மற்ற ஓசுமியம் அணைவுச்சேர்மங்களைத் தயாரிக்கவும் இச்சேர்மம் உதவுகிறது.
தயாரிப்பு, அமைப்பு, வினைகள்
[தொகு]1909 ஆம் ஆண்டில் முதன்முதலாக இச்சேர்மம் ஓசுமியம் உலோகத்தைக் குளோரினேற்றம் செய்து தயாரிக்கப்பட்டது[1]. இவ்வகை தயாரிப்பு முறையில் உயர் வெப்பநிலை பல்லுருவ அமைப்புச் சேர்மம் தோன்றுகிறது:[2]
- Os + 2 Cl2 → OsCl4.
கருஞ்சிவப்புப் பல்லுருவ அமைப்புச் சேர்மமானது நேர் சாய்சதுர படிகவமைப்பும், எண்முக ஒருங்கிணைப்பு கொண்ட ஓசுமியம் மையங்கள் OsCl6 எண்முகத்தின் எதிர் விளிம்புகளுடன் பகிர்ந்து கொள்கின்ற அமைப்பையும் ஏற்று சங்கிலியாக உருவாகின்றன[3]. ஓசுமியம் நான்காக்சைடுடன் தையோனைல் குளோரைடு சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பழுப்புநிற கனசதுர பல்லுருவ அமைப்பு சேர்மம் தோன்றுகிறது:[4]
- OsO4 + 4 SOCl2 → OsCl4 + 2 Cl2 + 4 SO2
ஓசுமியம் நான்காக்சைடு, ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து அறுகுளோரோ ஓசுமேட்டு எதிர்மின் அயனியைக் கொடுக்கிறது.
OsO4 + 8 HCl → H2OsCl6 + Cl2 + 4 H2O
- OsO4 + 8 HCl → H2OsCl6 + Cl2 + 4 H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otto Ruff and Ferd. Bornemann (1910). "Über das Osmium, seine analytische Bestimmung, seine Oxyde und seine Chloride". Zeitschrift für anorganische Chemie 65: 429–456. doi:10.1002/zaac.19100650126.
- ↑ Cotton, S. A. (1997). Chemistry of Precious Metals. London: Chapman and Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0413-6.
- ↑ Wells A.F. (1984). Structural Inorganic Chemistry (5th ). Oxford Science Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-855370-6. https://archive.org/details/structuralinorga0000well_m8i1.
- ↑ Paul Machmer (1967). "On the polymorphism of osmium tetrachloride". Chem. Commun. (12): 610a–610a. doi:10.1039/C1967000610A.