உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசுமியம் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுமியம் ஈராக்சைடு
Osmium (IV) Oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஓசுமியம் டையாக்சைடு
வேறு பெயர்கள்
ஓசுமியம்(IV) ஆக்சைடு
இனங்காட்டிகள்
12036-02-1 Y
பப்கெம் 187574
பண்புகள்
OsO2
வாய்ப்பாட்டு எடை 222.229 கி/மோல்
தோற்றம் கருப்பு அல்லது மஞ்சள்பழுப்பு
அடர்த்தி 11.4 கி/செ.மீ3
உருகுநிலை 500 °C (932 °F; 773 K) (சிதைவடைகிறது)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஓசுமியம் ஈராக்சைடு (இலங்கை முறை: ஒசுமியம் ஈரொட்சைட்டு) (Osmium dioxide) என்பது OsO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது பழுப்பிலிருந்து கருப்பு நிறமான படிகத் துகளாகக் காணப்படுகிறது. ஆனால் ஒற்றைப் படிகம் தங்க நிறத்திலும் உலோகங்களின் கடத்துகைப் பண்பையும் வெளிப்படுத்துகிறது. இச்சேர்மம் உரூத்தைல் நோக்குருவில் படிகமாகிறது. அதாவது உரூத்தைல் கனிமத்தின் இணைப்புத் திறனை ஓசுமியம் ஈராக்சைடும் பெற்றுள்ளது.

தயாரிப்பு

[தொகு]

சோடியம் குளோரேட்டு, ஓசுமியம் நான்காக்சைடு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற ஆக்சிசனேற்றிகள் ஓசுமியத்துடன் 600° செ [1][2]வெப்பநிலையில் வினை புரிந்து ஓசுமியம் ஈராக்சைடு தயாரிக்கப்படுகிறது. வேதியியல் போக்கு வினைகளைப் பயன்படுத்தினால் 7x5x3 மி.மீ3.அளவுள்ள பெரிய அளவிலான ஓசுமியம் ஈராக்சைடு படிகங்களைத் தயாரிக்க முடியும்:[3]

OsO2 + O2 is in equilibrium with OsO4

. ஒற்றைப் படிகங்கள் உலோகத் தடைமையாக ~15 μΩ செ.மீ அளவை வெளிப்படுத்துகின்றன. ஆவியாகும் OsO4 சேர்மத்தின் மீள்வினையில் உருவாகும் O2 கொண்டு செல்லும் முகவராக இங்குச் செயல்படுகிறது.

வினைகள்

[தொகு]

ஓசுமியம் ஈராக்சைடு தண்ணீரில் கரைவதில்லை. ஆனால், நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலத்தால் தாக்கப்படுகிறது. படிகங்கள் உரூத்தைல் கட்டமைப்பில் காணப்படுகின்றன[4][5][6]. ஓசுமியம் நான்காக்சைடைப் போல இதுவொன்றும் நச்சுத் தன்மையுடன் காணப்படவில்லை.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. A. F. Holleman and E. Wiberg (2001). Inorganic chemistry. Academic Press. p. 1465. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  2. Thiele G., Woditsch P. (1969). "Neutronenbeugungsuntersuchungen am Osmium(IV)-oxid". Journal of the Less Common Metals 17 (4): 459. doi:10.1016/0022-5088(69)90074-5. 
  3. Rogers, D. B.; Butler, S. R.; Shannon, R. D. (1972). "Single Crystals of Transition-Metal Dioxides". Inorganic Syntheses XIV: 135–145. doi:10.1002/9780470132449.ch27. 
  4. J. E. Greedan, D. B. Willson, T. E. Haas (1968). "Metallic nature of osmium dioxide". Inorg. Chem. 7 (11): 2461–2463. doi:10.1021/ic50069a059. 
  5. Yen, P (2004). "Growth and characterization of OsO
    2
    single crystals". Journal of Crystal Growth 262 (1-4): 271. doi:10.1016/j.jcrysgro.2003.10.021.
     
  6. Boman C.E.; Danielsen, Jacob; Haaland, Arne; Jerslev, Bodil; Schäffer, Claus Erik; Sunde, Erling; Sørensen, Nils Andreas (1970). "Precision Determination of the Crystal Structure of Osmium Dioxide". Acta Chemica Scandinavica 24: 123–128. doi:10.3891/acta.chem.scand.24-0123. 
  7. Smith, I.C., B.L. Carson, and T.L. Ferguson (1974). "Osmium: An appraisal of environmental exposure.". Env Health Perspect (Brogan &#38) 8: 201–213. doi:10.2307/3428200. பப்மெட்:4470919. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்_ஈராக்சைடு&oldid=2096049" இலிருந்து மீள்விக்கப்பட்டது