உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தக நாற்குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தக நாற்குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சல்பர்(IV) குளோரைடு
இனங்காட்டிகள்
13451-08-6
InChI
  • InChI=1/Cl4S/c1-5(2,3)4
யேமல் -3D படிமங்கள் Image
  • ClS(Cl)(Cl)Cl
பண்புகள்
SCl4
வாய்ப்பாட்டு எடை 173.87
தோற்றம் வெண் துகள்
உருகுநிலை −31 °C (−24 °F; 242 K)
கொதிநிலை −20 °C (−4 °F; 253 K) (சிதைவடைகிறது)
நீரில் கரைகிறது
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R14, R34, R50
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45, S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கந்தக நாற்குளோரைடு (Sulfur tetrachloride) என்பது SCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் வெளிர் மஞ்சள் நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நிலைப்புத் தன்மையற்று காணப்படுகிறது. 242 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் கந்தக நாற்குளோரைடு சிதைவடைந்து கந்தக இருகுளோரைடு மற்றும் குளோரினாக மாறுகிறது. கந்தக இருகுளோரைடு மற்றும் குளோரினை 193 கெல்வின் வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் கந்தக நாற்குளோரைடு உருவாகிறது.

கந்தக நாற்குளோரைடின் திண்ம அமைப்பு தொடர்பான உறுதியான கருத்துகள் ஏதுமில்லை. அனேகமாக SCl3+Cl என்ற அயனிகளால் உருவான உப்பாக இது இருக்கலாம். ஏனெனில் இதனுடன் தொடர்புடைய உப்புகள் அறியப்பட்டுள்ளன.[1]

பண்புகள்

[தொகு]

கந்தக நாற்குளோரைடு −30 °செல்சியசு வெப்பநிலைக்குக் கீழ் திண்மநிலையில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. வெப்பநிலை உயர்ந்தால் இச்சேர்மம் சிதைவடைந்து கந்தகம் மற்றும் குளோரினாக மாறுகிறது. திண்மநிலையில் இறுதியாக தூளாக்கப்பட்டபின் இது வெண்மைநிற பொருளாகக் காணப்படுகிறது. சிதைவடையும் அதேநேரத்தில் −20 ° செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்குகிறது[2]. தண்ணீருடன் வினைபுரிந்து நீராற்பகுப்பு மூலமாக ஐதரசன் குளோரைடு மற்றும் கந்தக டை ஆக்சைடு ஆகியனவற்றைக் கொடுக்கிறது[3].

வாயுநிலை கந்தக நாற்குளோரைடானது சாய்ந்தாடி மூலக்கூற்று வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக நுண்ணலை நிறமாலையியல் ஆய்வும் எலக்ட்ரான் விளிம்பு வளைவு ஆய்வும் தெரிவிக்கின்றன[4]. திரவநிலையில் இது நிலையற்ற முக்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது[4].

வினைகள்

[தொகு]
  • சிதைவடைதல்:


மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Georg Brauer: Handbuch der Präparativen Anorganischen Chemie. (செருமன் மொழி)
  3. Holleman-Wiberg, Lehrbuch der Anorganischen Chemie, 101. Auflage, de Gruyter Verlag 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-012641-9 (செருமன் மொழி)
  4. 4.0 4.1 Goettel, J. T., Kostiuk, N. and Gerken, M. (2013), The Solid-State Structure of SF4: The Final Piece of the Puzzle . Angew. Chem. Int. Ed., 52: 8037–8040. எஆசு:10.1002/anie.201302917
  5. Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. (உருசிய மொழியில்)
  6. Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-85270-092-6 (உருசிய மொழியில்)
  7. Лидин Р.А. и др. Химические свойства неорганических веществ: Учеб. пособие для вузов. — 3-е изд., испр. — М.: Химия, 2000. — 480 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-7245-1163-0 (உருசிய மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தக_நாற்குளோரைடு&oldid=2696470" இலிருந்து மீள்விக்கப்பட்டது