உள்ளடக்கத்துக்குச் செல்

தைட்டானியம்(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(II) குளோரைடு
இனங்காட்டிகள்
10049-06-6 N
ChemSpider 8466246 Y
EC number 233-164-9
InChI
  • InChI=1S/2ClH.Ti/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: ZWYDDDAMNQQZHD-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2ClH.Ti/h2*1H;/q;;+2/p-2
    Key: ZWYDDDAMNQQZHD-NUQVWONBAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66228
  • [Ti+2].[Cl-].[Cl-]
UNII BK26WI342Q N
பண்புகள்
Cl2Ti
வாய்ப்பாட்டு எடை 118.77 g·mol−1
தோற்றம் கருப்பு, அறுகோணப் படிகத் திட்டம்
அடர்த்தி 3.13 கி/செ.மீ3
உருகுநிலை 1,035 °C (1,895 °F; 1,308 K)
கொதிநிலை 1,500 °C (2,730 °F; 1,770 K)
+570.0·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn அரிக்கும் C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தைட்டானியம் குளோரைடு (Titanium(II) chloride) TiCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் அதிக வினைத்திறம் கொண்டது அகும் [1]. இதனால் இச்சேர்மம் மிகச்சிறிய அளவிலேயே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. Ti(II) ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். ஆக்சிசனுடன் அதிக நாட்டம் கொண்டிருப்பதால் தண்ணீருடன் வினைபுரிகையில் மீளா வினையாக ஐதரசனை உற்பத்தி செய்கிறது. வழக்கமான தயாரிப்பு முறை என்பது 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் TiCl3 சேர்மத்தை விகிதச்சமமற்ற விகிதச் சிதைவுக்கு உட்படுத்தும் முறையாகும். ஆவியாகக் கூடிய TiCl4 இன் இழப்பால் இவ்வினை இயக்கப்படுகிறது

2 TiCl3 → TiCl2 + TiCl4

இவ்வினை வனேடியம்(III) குளோரைடை வனேடியம்(II) குளோரைடாகவும் வனேடியம் நாற்குளோரைடாகவும் மாற்றுகின்ற முறையைப் போன்ற வினையாகும் CdI2 கட்டமைப்பு அடுக்காலானதைப் போன்ற அமைப்பில் தைட்டானியம் குளோரைடு படிகமாகிறது. இதன்படி Ti(II) மையங்கள் ஆறு குளோரைடு ஈந்தணைவிகளுடன் எண்முக ஒருங்கமைவைக் கொண்டுள்ளன.

வழிப்பொருட்கள்

[தொகு]

TiCl2(chel)2, போன்ற மூலக்கூற்று அணைவுச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. இங்குள்ள chel என்பது 1,2-பிசு(டைமெத்தில்பாசுபினோ)யெத்தேன், ((CH3)2PCH2CH2P(CH3)2) மற்றும் டெட்ராமெத்தில்யெத்திலீன்டையமீன் ((CH3)2NCH2CH2N(CH3)2) போன்றவற்றைக் குறிக்கும் [2]. இத்தகைய இனங்களை தொடர்புடைய Ti(III) மற்றும் Ti(IV) அணைவுகளை ஒடுக்குவதன் மூலம் தயாரிக்கலாம். . TiCl2[(CH3)2PCH2CH2P(CH3)2]2 சேர்மம் மும்மைச் சுழற்சி நிலையுடன் கூடிய பாரா காந்தத் தன்மையும் Ti(CH3)2[(CH3)2PCH2CH2P(CH3)2]2 iசேர்மம் டையா காந்தத் தன்மையும் கொண்டுள்ளன [3]. இவ்வினங்களில் வழக்கத்திற்கு மாறான மின்னியல் விளைவுகள் அறியப்படுகின்றன.

Na2TiCI4 சேர்மம் தைட்டானியம் குளோரைடின் திண்மநிலை வழிப்பொருளாகும். தைட்டானியம் உலோகத்துடன் சோடியம் குளோரைடு பாய்மத்திலுள்ள தைட்டானியம் முக்குளோரைடுடன் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள் [4]. இவ்வினங்கள் நேரியல் சங்கிலி கட்டமைப்பை ஏற்கின்றன. இங்கு மீண்டும் Ti(II) மையங்கள் விளிம்பிலுள்ள ஊடச்சு ஆலைடுகளுடன் எண்முக வடிவிலுள்ளன [5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Holleman, A. F.; Wiberg, E. Inorganic Chemistry Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  2. Girolami, G. S.; Wilkinson, G.; Galas, A. M. R.; Thornton-Pett, M.; Hursthouse, M. B. (1985). "Synthesis and properties of the divalent 1,2-bis(dimethylphosphino)ethane (dmpe) complexes MCl2(dmpe)2 and MMe2(dmpe)2 (M = Ti, V, Cr, Mn, or Fe). X-Ray crystal structures of MCl2(dmpe)2 (M = Ti, V, or Cr), MnBr2(dmpe)2, TiMe1.3Cl0.7(dmpe)2, and CrMe2(dmpe)2". J. Chem. Soc., Dalton Transactions: 1339–1348. 
  3. Jensen, J. A.; Wilson, S. R.; Schultz, A. J.; Girolami, G. S. (1987). "Divalent Titanium Chemistry. Synthesis, Reactivity, and X-ray and Neutron Diffraction Studies of Ti(BH4)2(dmpe)2 and Ti(CH3)2(dmpe)2". J. Am. Chem. Soc. 109 (26): 8094–5. doi:10.1021/ja00260a029. 
  4. Hinz, D. J.; Dedecke, T.; Urland, W.; Meyer, G.. "Synthese, Kristallstruktur und Magnetismus von Natriumtetrachlorotitanat(lI), Na2TiCI4". ZAAC 620: 801–804. 
  5. Jongen, L.; Gloger, T.; Beekhuizen, J.; Meyer, G. (2005). "Divalent titanium: The halides ATiX3 (A = K, Rb, Cs; X = Cl, Br, I)". ZAAC 631 (2–3): 582–586. doi:10.1002/zaac.200400464. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(II)_குளோரைடு&oldid=2691076" இலிருந்து மீள்விக்கப்பட்டது