இசுக்காண்டியம்(III) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுக்காண்டியம்(III) குளோரைடு
Scandium(III) chloride
Scandium(III) chloride
இசுக்காண்டியம்(III) குளோரைடு அறுநீரேற்றின் படிகங்கள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம்(III) முக்குளோரைடு
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம் குளோரைடு
இசுக்காண்டியம் முக்குளோரைடு
இனங்காட்டிகள்
10361-84-9
ChemSpider 74528 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82586
வே.ந.வி.ப எண் VQ8925000
பண்புகள்
ScCl3
வாய்ப்பாட்டு எடை 151.31 கி/மோல்
தோற்றம் சாம்பல்நிற-வெண் படிகங்கள்
அடர்த்தி 2.39 கி/மி.லி, திண்மம்
உருகுநிலை
கரையும்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் எத்தில் ஆல்ககாலில் கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உறுத்தும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
Lethal dose or concentration (LD, LC):
3980 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இசுக்காண்டியம்(III) குளோரைடு (Scandium chloride) என்பது ScCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உள்ள இச்சேர்மம் உயர் உருகுநிலை அயனிச் சேர்மம் ஆகும். நீர் உறிஞ்சும் திறன் கொண்டிருக்கும் இச்சேர்மம் தண்ணீரில் நன்றாக கரைகிறது[1]. பிரதானமாக ஆய்வுப்பணி ஆய்வகங்களில் இசுக்காண்டியம்(III) குளோரைடு பயன்படுகிறது. நீரிலி வடிவம் மற்றும் அறுநீரேற்று வடிவம் ஆகிய இரண்டு வடிவங்களிலும் காணப்படும் இசுக்காண்டியம்(III) குளோரைடு வர்த்தகரீதியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

ScCl3 அடுக்கு BiI3 நோக்குருவில் எண்முக இசுக்காண்டியம் மையங்கள் கொண்ட தோற்றத்தில் படிகமாகிறது[2]. 900 கெல்வின் ஆவிநிலையில் ஒருறுப்பான ScCl3 சேர்மம் ஒரு முக்கியமான சேர்மமாக விளங்குகிறது. இருபடி சேர்மமான Sc2Cl6 சேர்மம் தோராயமாக 8 சதவீதமும் காணப்படுகிறது.[3] ஒருறுப்பு ScCl3 சேர்மம் சமதள அமைப்பிலும் இருபடி ScCl3 சேர்மம் ஒவ்வொரு இசுக்காண்டியம் அணுவும் நான்கு ஒருங்கிணைவுகள் கொண்டு இரண்டு குளோரின் அணு பாலங்களுடன் காணப்படுவதாக மின்னணு விளிம்புவிலகல் நிறமாலை பகுப்பாய்வு தெரிவிக்கிறது.[3]

வேதியியல் பண்புகள்[தொகு]

குறை கார ஈந்தணைவியான நான்கைதரோபியுரோனுடன் ScCl3 வினை புரிந்து வெண்மை நிற ScCl3(THF)3 படிகங்களைத் தருகிறது. இப்படிகங்களின் அணைவுக் கரைசல் கரிம இசுக்காண்டியம் சேர்மங்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[4] பன்னிரு சல்பேட்டு உப்பாகவும் ScCl3 சேர்மத்தை மாற்ற முடியும். இதனை இலூயிக் அமில - பரப்புவினை இணைந்த வினையூக்கியாகப் பயன்படுத்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.

ஒடுக்க வினை[தொகு]

இசுக்காண்டியம்(III) குளோரைடு மற்றும் இதர உப்புகளைப் பயன்படுத்தி பிசர் எட் ஆல் முதலில் உலோக இசுக்காண்டியம் தயாரித்தார். இதற்காக எளிதில் உருகும் இசுக்காண்டியம்(III) குளோரைடுடன் எளிதில் உருகும் இசுக்காண்டிய உருகலை 700 முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினார்[5]

S. ScCl3 இசுக்காண்டியத்துடன் வினைபுரிந்து பல எண்ணிக்கையிலான ScCl, Sc7Cl10, Sc2Cl3, Sc5Cl8 மற்றும் Sc7Cl12. போன்ற குளோரைடுகளைத் தருகிறது. இங்கு இசுக்காண்டியம் <+3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது[1][6]. உதாரணமாக சீசியம் குளோரைடு முன்னிலையில் ScCl3 இசுக்காண்டியம் உலோகத்துடன் வினைபுரிந்து CsScCl3 என்ற சேர்மத்தைத் தருகிறது. இதில் ScIICl3− நேரியல் சங்கிலிகள் சேர்ந்து உருவான ScIICl6 எண்முகப் பகிர்வுகள் காணப்படுகின்றன.[7]

பயன்கள்[தொகு]

சில ஆலைடு விளக்குகள், ஒளியியல் இழைகள், மின்னணு மட்பாண்டம், மற்றும் லேசர் எனப்படும் சீரொளி முதலியவற்றில் இசுக்காண்டியம்(III) குளோரைடு காணப்படுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Crystal Structure of ScCl3 Refined from Powder Neutron Diffraction Data, Fjellvåg, H., Karen, P., Acta Chemica Scandinavica, 48, 294-297, எஆசு:10.3891/acta.chem.scand.48-0294
  3. 3.0 3.1 Haaland A., Martinsen K-G, Shorokhov D.J, Girichev G.V., Sokolov V.I, J. Chem. Soc., Dalton Trans., 1998, 2787 - 2792, எஆசு:10.1039/a803339k
  4. Manzer, L. E., "Tetrahydrofuran Complexes of Selected Early Transition Metals", Inorganic Syntheses, 1982, volume 21, page 135-40.எஆசு:10.1002/9780470132524.ch31
  5. Fischer, Werner; Brünger, Karl; Grieneisen, Hans (1937). "Über das metallische Scandium". Zeitschrift für anorganische und allgemeine Chemie 231 (1-2): 54–62. doi:10.1002/zaac.19372310107. 
  6. Corbett, J.D. (1981). "Extended metal-metal bonding in halides of the early transition metals". Acc. Chem. Res. 14: 239–246. doi:10.1021/ar00068a003. 
  7. Meyer, Gerd.; Corbett, John D. (1981). "Reduced ternary halides of scandium: RbScX3 (X = chlorine, bromine) and CsScX3 (X = chlorine, bromine, iodine)". Inorganic Chemistry 20 (8): 2627–2631. doi:10.1021/ic50222a047. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
  8. Metal Suppliers Online. (2000). Scandium Chloride