ஓசுமியம் போரைடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சாய்சதுர OsB2 சேர்மத்தின் கட்டமைப்பு. பச்சை அணுக்கள் Os, இளஞ்சிவப்பு –போரான்

ஓசுமியம் போரைடுகள் (Osmium borides) என்பவை ஓசுமியமும் போரானும் சேர்ந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும். சாத்தியமாகும் அதிக கடினத்தன்மையே இச்சேர்மங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்பாகும். போரான்-ஓசுமியம் சகப் பிணைப்புகளின் வலிமையுடன் ஓசுமியத்தின் உயர் எலக்ட்ரான் அடர்த்தியின் இணைப்பு ஓசுமியம் போரைடுகளை மீக்கடினப் பொருட்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, OsB2 கடினமானதுதான், நீலமாணிக்கத்தின் கடினத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கதுதான், ஆனால் மிகவும் கடினமானது அல்ல.[1]

தயாரிப்பு[தொகு]

ஓசுமியம் முக்குளோரைடுடன் (OsCl3) மக்னீசியம் இருபோரைடைச் (MgB2) சேர்த்து தோராயமாக 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஓசுமியம் போரைடு உருவாகிறது. மிகத் தீங்கு விளைவிக்கும் சேர்மமான ஓசுமியம் டெட்ராக்சைடு உருவாதலைத் தடுக்க வெற்றிடத்தில் அல்லது மந்தவாயுச் சூழலில் ஓசுமியம் போரைடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]

கட்டமைப்பு[தொகு]

OsB, Os2B3 மற்றும் OsB2 என மூன்று ஓசுமியம் போரைடுகள் அறியப்படுகின்றன. முதலிரண்டும் இரேனியம் இருபோரைடு போல அறுகோணக் கட்டமைப்பு கொண்டுள்ளன.[2] ஓசுமியம் டைபோரைடும் முதலில் அறுகோணமாக கருதப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.[3] ஆனால் இதன் ஒரு கட்டம் பின்னர் செஞ்சாய்சதுரத்திற்கு மாறுகிறது.[1][4] சமீபத்திய தயாரிப்பு முறைகளில், OsB2 சேர்மத்தின் ஒரு அறுகோண கட்டம் ReB2 போன்ற அமைப்புடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Cumberland, Robert W. (April 27, 2005). "Osmium Diboride, An Ultra-Incompressible, Hard Material". Journal of the American Chemical Society 127 (20): 7264–5. doi:10.1021/ja043806y. பப்மெட்:15898746. 
  2. M. Hebbache (2006). "A new superhard material: Osmium diboride OsB2". Solid State Communications 139 (5): 227–231. doi:10.1016/j.ssc.2006.05.041. Bibcode: 2006SSCom.139..227H. 
  3. Kempter, C. P.; Fries, R. J. (1961). "Crystallography of the Ru-B and Os-B Systems". The Journal of Chemical Physics 34 (6): 1994. doi:10.1063/1.1731807. Bibcode: 1961JChPh..34.1994K. 
  4. Roof, R. B.; Kempter, C. P. (1962). "New Orthorhombic Phase in the Ru-B and Os-B Systems". The Journal of Chemical Physics 37 (7): 1473. doi:10.1063/1.1733309. Bibcode: 1962JChPh..37.1473R. 
  5. Xie, Zhilin; Blair, Richard G.; Orlovskaya, Nina; Cullen, David A.; Andrew Payzant, E. (2014-11-01). "Thermal stability of hexagonal OsB2". Journal of Solid State Chemistry 219: 210–219. doi:10.1016/j.jssc.2014.07.035. Bibcode: 2014JSSCh.219..210X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்_போரைடுகள்&oldid=3389691" இலிருந்து மீள்விக்கப்பட்டது