சிர்க்கோனியம்(IV) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனியம்(IV) புரோமைடு
Zirconium(IV) bromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் நாற்புரோமைடு
இனங்காட்டிகள்
13777-25-8 N
ChemSpider 75549 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
ZrBr4
வாய்ப்பாட்டு எடை 410.86 கி/மோல்
தோற்றம் மங்கலான வெள்ளைத் தூள்
அடர்த்தி 4.201 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை
கொதிநிலை பதங்கமாகும்
நீருடன் வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cP40
புறவெளித் தொகுதி P-43m, No. 205
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சிர்க்கோனியம்(IV) புளோரைடு
சிர்க்கோனியம்(IV)குளோரைடு
சிர்க்கோனியம்(IV) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம் நாற்புரோமைடு
ஆப்னியம் நாற்புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சிர்க்கோனியம்(IV) புரோமைடு (Zirconium(IV) bromide) என்பது ZrBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். மற்ற Zr–Br சேர்மங்கள் தயாரிப்பதற்கு இந்த நிறமற்ற திடப்பொருள் ஒரு முதன்மையான முன்னோடியாகத் திகழ்கிறது.

தயாரிப்பு மற்றும் பண்புகள்[தொகு]

மீவெப்ப கார்பன் ஒடுக்கவினை வழிமுறையில் சிர்க்கோனியம் ஆக்சைடு மீது புரோமினைச் செலுத்துவதால் சிர்க்கோனியம்(IV) புரோமைடு உண்டாகிறது:[1].

ZrO2 + 2 C + 2 Br2 → ZrBr4 + 2 CO

பல நான்காலைடுகள் போலவே இதுவும் பதங்கமாதல் முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறது.

இதனுடன் தொடர்புடைய மற்ற நாற்புரோமைடுகள் Ti மற்றும் Hf, போலவே சிர்க்கோனியம்(IV) புரோமைடும் நீராற்பகுப்பு வினையின் மூலமாக ஐதரசன் புரோமைடை வெளியேற்றி உடனடியாக ஆக்சி புரோமைடைத் தருகிறது.

கட்டமைப்பு[தொகு]

TiCl4 மற்றும் TiBr4, போன்ற தொடர்புடைய சேர்மங்கள் பெற்றுள்ள அமைப்பைப் போலவே சிர்க்கோனியம்(IV) புரோமைடும், நான்முக சிர்க்கோனியம் மையங்களைக் கொண்டுள்ளது[2]. மாறாக சிர்க்கோனியம்(IV) குளோரைடு திடநிலையில் உள்ள போது பலபடிசார் சேர்மமாக எண்முக சிர்க்கோனியம் மையங்களுடன் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. R. C. Young, Hewitt G. Fletcher, "Anhydrous Zirconium Tetrabromide" Inorganic Syntheses, 1939, vol. 1, pp. 49–51. எஆசு:10.1002/9780470132326.ch18
  2. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.