தைட்டானியம் டெட்ராபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம் டெட்ராபுரோமைடு
Titanium tetrabromide
தைட்டானியம் டெட்ராபுரோமைடு
Ball-and-stick model of the titanium tetrabromide molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தைட்டானியம் டெட்ராபுரோமைடு
வேறு பெயர்கள்
தைட்டானியம்(IV) புரோமைடு
இனங்காட்டிகள்
7789-68-6 Yes check.svgY
EC number 232-185-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123263
பண்புகள்
TiBr4
வாய்ப்பாட்டு எடை 367.483 கி/மோல்
தோற்றம் பழுப்பு நிற படிகங்கள்
நீருறிஞ்சும்
அடர்த்தி 3.25 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 230 °C (446 °F; 503 K)
நீராற்பகுப்பு அடையும்
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் குளோரோகார்பன்கள், பென்சீன்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், Pa3, Z = 8
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும்
R-சொற்றொடர்கள் 14-34
S-சொற்றொடர்கள் 26-36/37/39-45
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் TiCl4
TiI4
ஏனைய நேர் மின்அயனிகள் VCl4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தைட்டானியம் டெட்ராபுரோமைடு (Titanium tetrabromide) என்பது TiBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இடைநிலை உலோக புரோமைடுகளில் அதிகமாக ஆவியாகக் கூடிய புரோமைடாக இது கருதப்படுகிறது. தைட்டானியம் டெட்ராகுளோரைடு, தைட்டானியம் டெட்ரா அயோடைடு ஆகிய சேர்மங்கள் பெற்றுள்ள பண்புகளின் சராசரி பண்புகளை தைட்டானியம் டெட்ராபுரோமைடு பெற்றுள்ளது. உயர் லூயிசு அமிலப்பண்பும், முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் அதிகமாகக் கரைவதும் இந்த நான்கு ஒருங்கிணைவுகள் கொண்ட Ti (IV) இன வேதிச்சேர்மங்கள் இனத்தின் சில முக்கிய பண்புகளாகக் கருதப்படுகின்றன. TiBr4 சேர்மம் டையா காந்தப்பண்பு கொண்டதாகும். இது உலோக மையத்தின் d0 அமைப்பை பிரதிபலிக்கிறது [1].

தயாரிப்பும் கட்டமைப்பும்[தொகு]

இந்த நான்கு ஒருங்கிணைவு அணைவுச் சேர்மம் நான்முக வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. இதை பல வழிமுறைகளில் தயாரிக்க முடியும்.

  1. தனிமங்களிலிருந்து தயாரிக்கலாம்.
  2. தைட்டானியம் டையாக்சைடுடன் கார்பன் மற்றும் புரோமின் (கிரால் செயல்முறை) சேர்த்து வினைபுரியச் செய்வதன் வழியாகத் தயாரிக்கலாம்.
  3. தைட்டானியம் டெட்ராகுளோரைடுடன் ஐதரசன் புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் தயாரிக்கலாம்.

வினைகள்[தொகு]

TiBr4(THF)2 மற்றும் [TiBr5]. [TiBr5]− போன்ற கூட்டு விளைபொருட்களை [2] 2-மெத்தில்பிரிடின் போன்ற பெரிய ஈந்தணைவி வழங்கிகளுடன் சேர்ந்து தைட்டானியம் டெட்ராபுரோமைடு உருவாக்குகிறது. ஐந்து ஒருங்கிணைவுகள் கொண்ட வடிவமான TiBr4(2-மெத்தில்பிரிடின்) முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு வடிவில் உள்ளது. இதில் பிரிடின் மத்தியகோட்டுத்தளத்தில் அமைந்துள்ளது [3]. கரிமத் தொகுப்பு வினைகளில் தைட்டானியம் டெட்ராபுரோமைடு ஒரு லூயிசு அமில வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [4].

தைட்டானியத்தின் டெட்ராபுரோமைடும் டெட்ராகுளோரைடும் வினைபுரிந்து கலப்பு டெட்ரா ஆலைடுகளை TiBr4−xClx (x = 0-4) உருவாக்குகின்றன. இந்த மறுபகிர்வு வினையின் வினை வழிமுறை உறுதியில்லாததாகும். முன்மொழியப்படும் ஒரு பாதையும் இருபடிகளின் இடைநிலைகளை அழைக்கிறது [5].

பாதுகாப்பு[தொகு]

எளிதில் நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் புரோமைடை வெளிவிடுவதால் இச்சேர்மம் அபாயத்தை விளைவிக்கும் சேர்மமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
  2. Colin S. Creaser; J. Alan Creighton (1975). "Pentachloro- and pentabromo-titanate(IV) ions". J. Chem. Soc., Dalton Trans. (14): 1402–1405. doi:10.1039/DT9750001402. 
  3. Hensen, K.; Lemke, A.; Bolte, M. (2000). "Tetrabromo(2-methylpyridine-N)-titanate(IV)". Acta Crystallographica C56 (12): e565–e566. doi:10.1107/S0108270100015407. 
  4. B. Patterson, S. Marumoto; S. D. Rychnovsky (2003). "Titanium(IV)-Promoted Mukaiyama Aldol-Prins Cyclizations". Org. Lett. 5 (17): 3163–3166. doi:10.1021/ol035303n. பப்மெட்:12917007. 
  5. S. P. Webb; M. S. Gordon (1999). "Intermolecular Self-Interactions of the Titanium Tetrahalides TiX4 (X = F, Cl, Br)". J. Am. Chem. Soc. 121 (11): 2552–2560. doi:10.1021/ja983339i.