எத்திடியம் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எத்திடியம் புரோமைடு
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 1239-45-8
பப்கெம் 14710
ஐசி இலக்கம் 214-984-6
KEGG C11161
வே.ந.வி.ப எண் SF7950000
ATC code P51AX06
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C21H20BrN3
மோலார் நிறை 394.294 g/mol
தோற்றம் செவ்வூதா நிறத் திண்மம்
உருகுநிலை

260 - 262 °C

நீரில் கரைதிறன் ~ 40 g/l
தீநிகழ்தகவு
NFPA 704

NFPA 704.svg

0
3
0
 
R-phrases வார்ப்புரு:R36/37/38, R46
S-phrases S22, S24/25, S26, S36/37/39, S45, S53
தீப்பற்றும் வெப்பநிலை > 100 °C
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
எத்திடியம் புரோமைடு உள்வாங்கு ஒளியலைகள்

எத்திடியம் புரோமைடு (Ethidium bromide, சில இடங்களில் "EtBr" என சுருக்கெழுத்துகளில் குறிக்கப்பெறும், இச்சுருக்கெழுத்து புரோமோமெத்தேன் என்னும் பொருளுக்கும் பயன்படுகின்றது), என்னும் வேதிப்பொருள் 21 கரிம அணுக்கள் கொண்ட 4 அறுகோண வளையம் கொண்ட, புரோமின் அணு உள்ள, அரோமாட்டிக் வகையைச் சேர்ந்த, C21H20BrN3 என்னும் வேதி வாய்பாடு கொண்ட ஒரு பொருள். நான்கு அறுகோண வளையங்களில் ஒன்று (பீனைல் குழு உடையது) ஏறத்தாழ மற்ற வளையங்களுக்கு செங்குத்தான தளத்தில் அமைந்துள்ள அமைப்பு கொண்டது. எத்திடியம் புரோமைடு இடைப்பிணைவுறும் (intercalating) வினைகளில் பயன்படும் ஒரு பொருள். இது கருக்காடி (நியூக்கிளிக் காடி) போன்ற குறிப்பிட்ட பொருள்களுடன் பிணைப்புற்று நின்று ஒளிரக்கூடிய தன்மை உடைய பொருள் (இவற்றை ஒளிரி அல்லது தூண்டொளிரி என்று இங்கு அழைக்கின்றோம்). ஒளிரியாகிய எத்திடியம் புரோமைடை மின்புல தூள்நகர்ச்சி (electrophoresis) முதலிய செய்முறை நுட்பங்களில் பயன்படுத்துகின்றனர். புற ஊதாக்கதிர்களை வீசினால் எத்திடியம் புரோமைடு செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்தில் ஒளிர்வது மட்டுமல்லாமல், டி.என்.ஏவுடன் பிணைவுற்றபின் இவ்வொளியின் அடர்த்தி (intensity) 20 மடங்காக உயரும். எத்திடியம் புரோமைடு முன்னர் ஓமிடியம் (அல்லது உஃகோமிடியம், homidium) என்னும் பெயரில் 1950களில் இப்பொருள் விலங்குமருத்துவ இயலில் மாடுகளுக்கு ஏற்படும் டிரிப்பனோசொமோசிசு (Trypanosomosis) என்னும் நோய்க்கு மருந்தாகப்ப் பயன்படுத்தினர். எத்திடியம் புரோமைடு வலுவான மரபணு புரட்டி அல்லது மரபணு பிறழ்ச்சியூட்டி (mutagen) ஆகும். மேலும் எத்திடியம் புரோமைடு புற்றுநோயூட்டி (carcinogen) என்றும், சூழலிடப் புற்றுநோயூட்டி (டெராட்டோச்சென், teratogen) என்றும் கருதப்படுகின்றது. ஆனால் இப்பண்புகளைத் துல்லியமாக நிறுவப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்திடியம்_புரோமைடு&oldid=1765231" இருந்து மீள்விக்கப்பட்டது