புற ஊதாக் கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புற ஊதாக்கதிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


அப்போலோ-16 என்னும் விண்கலத்தில் இருந்து, விண்ணோட்டிகள், நில உலகை, நிலாவில் இருந்து எடுத்த புற ஊதாக் கதிர் படம்.

புற ஊதாக் கதிர் (ultraviolet light) என்பது கண்களால் பார்த்து பெரும்பாலும் உணரமுடியாத மின்காந்த ஒளி அலைகள் ஆகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா வரையான கதிர்களின் ஒழுங்கில், ஊதாக்கதிர்களுக்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது.

பொதுவாக கண்களால் பார்த்து உணரவல்ல ஒளி அலைகள் அதிக அலைநீளம் (750 நானோ மீ) கொண்ட கருஞ்சிவப்பு அலைகளில் இருந்து மிகக்குறைந்த அலைநீளம் (380 நானோ மீ) கொண்ட கரும் ஊதா (நீல) நிற அலைகள் வரை ஆகும். அறிவியலில் புற ஊதாக்கதிர்கள் என்பன 400 நானோ மீட்டர் நீள மின்காந்த "ஒளி" அலைகள் முதல் 10 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட அலைகள் ஆகும் என்று வரையறை செய்யப்படுகின்றது. புற ஊதாக் கதிர்களை மனிதனால் காண முடியாவிட்டாலும் சில பறவைகளாலும் பூச்சிகளாலும் பார்க்க முடியும். அலைநீளம் குறைவாக இருந்தால் அவ்வொளி அலையின் ஆற்றல் கூடுதலாகும். புற ஊதாக் கதிர்களின் ஆற்றல் பரப்பு 3 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 124 எவோ (eV) வரை ஆகும். புற ஊதாக் கதிர்களின் ஆற்றல் புதிர்க்கதிர்கள் எனப்படும் எக்சு கதிர்களின் (X-ray) ஆற்றலைவிடக் குறைவானது.

மிகச் சிறிய அளவு வரை நமது உடலுக்கு இது தேவைப்பட்டாலும், நம் உடலில் பட்டால் தோல் உடனே வெந்துவிடக் கூடியது. கேன்சர் நோய் உண்டாகும் அபாயமும் உண்டு. உடலிலுள்ள அணுக்களை அயனியாக்கும் அளவிற்கு ஆற்றல் இல்லாவிட்டாலும், வேதியியல் பிணைப்புகளை மாற்றி அமைத்து விடும். வெளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமியின் மேல் மண்டலத்திலிருக்கும் ஓசோன் தடுத்து விடுவதாலேயே நாம் பூமியில் உயிருடன் இருக்க முடிகிறது. வெங்குரு மற்றும் விட்டமின் D உருவாக்கத்திற்கு இவ்வகை கதிர்கள் காரணமாக இருக்கின்றன. இதனால் புற ஊதா நிறமாலை மனித உடலுக்கு இருவேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

கண்டுபிடிப்பு[தொகு]

சூரிய ஒளி படும்போது வெள்ளி உப்புக்கள் கருமையாக மாறின. புற ஊதா கதிர்வீச்சு கண்டுபிடிப்பு அந்த கவனிப்பு தொடர்புடையதாக இருந்தது. 1801 ல் , ஜெர்மன் இயற்பியலாளர் ஜோஹன் வில்ஹெல்ம் ரிட்டர் வெள்ளி குளோரைடு நனைத்த காகிதத்தை ஊதா நிறத்திற்கு அப்பால் உள்ள கதிர்கள் ஊதா நிறக்கதிரை விட வேகமாக கருமையாக்குவதாக கண்டுபிடித்தார். இவற்றின் வேதியியல் கூறுகளை வலியுறுத்த மற்றும் " வெப்ப கதிர்கள்களில் " இருந்து வேறுபடுத்த இவற்றை அவர் "ஆக்சிஜனேற்றக் கதிர்கள்" என்று அழைத்தார். எளிமையான " இரசாயன கதிர்கள் " என்ற பதம் விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது 19ஆம் நூற்றாண்டு முழுவதும் பிரபலமாக இருந்தது. பின்னர் இரசாயன மற்றும் வெப்ப கதிர்களுக்கு பதிலாக முறையே, புற ஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர் ஆகிய பதங்கள் உபயோகப்படுத்தப்படலாயின. [1][2]

200 நானோமீட்டருக்கும் கீழே அலைநீளம் கொண்ட புற ஊதா கதிரின் கண்டுபிடிப்பு ஜெர்மன் இயற்பியலாளர் விக்டர் சூமானால் 1893 ல் செய்யப்பட்டது. இது கடுமையாக காற்று மூலம் உறிஞ்சப்படுவதால் வெற்றிட புற ஊதா என்று அழைக்கப்பட்டது. [3]

சொல்லின் தோற்றம்[தொகு]

புற ஊதா ஒளி ஊதா ஒளியை விட குறைந்த அலைநீளம் கொண்டது. அதனால் நிறமாலையில் ஊதாவிற்கு அப்பால் என்று பொருள்பட புற ஊதா என்று அழைக்கப்படுகிறது.

வகைகள்[தொகு]

புற ஊதாக்கதிரின் மின்காந்த நிழற்பட்டையை பல்வேறு வகைகளில் பிரிக்கலாம். solar irradiances கண்டறிவதற்கான ஐ.எஸ்.ஓ (ISO-21348)[4] பின்வரும் வரம்புகளை விவரிக்கிறது:

பெயர் Abbreviation அலைநீளம் range
(நானோமீட்டர்களில்)
ஒரு ஒளியணுவின் ஆற்றல்
(இலத்திரன்வோல்ட்களில்)
Notes / மற்ற பெயர்கள்
புற ஊதா UV 400 – 100 nm 3.10 – 12.4 eV
புற ஊதா A UVA 400 – 315 nm 3.10 – 3.94 eV நீண்ட அலை, கருப்பு ஒளி
புற ஊதா B UVB 315 – 280 nm 3.94 – 4.43 eV மத்திம அலை
புற ஊதா C UVC 280 – 100 nm 4.43 – 12.4 eV குறுகிய அலை, கிருமி நாசினி
கிட்ட புற ஊதா NUV 400 – 300 nm 3.10 – 4.13 eV பறவைகள், பூச்சிகள் மற்றும் மீன்களுக்கு தெரியும்
நடு புற ஊதா MUV 300 – 200 nm 4.13 – 6.20 eV
தூர புற ஊதா FUV 200 – 122 nm 6.20 – 10.16 eV
ஹைட்ரஜன் லைமன் - ஆல்பா H Lyman-α 122 – 121 nm 10.16– 10.25 eV
தீவிர புற ஊதா EUV 121 – 10 nm 10.25 – 124 eV
வெற்றிட புற ஊதா VUV 200 – 10 nm 6.20 – 124 eV

காற்று மூலம் கடுமையாக உறிஞ்சப்படுவதால் வெற்றிட புற ஊதா கதிர்களுக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. இதனால் இது வெற்றிடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கதிர்களின் அலைநீளமான 150 – 200 நானோமீட்டரில் முக்கியமான உறிஞ்சி காற்றிலுள்ள ஆக்சிசன் தான். அதனால் ஆக்சிஜன் இல்லா சூழலில் (பொதுவாக சுத்தமான நைட்ரசன்), இது பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

இரசாயன எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பொருட்களில் ஒளிர்வை தூண்டுவதாலும் புற ஊதா ஒளி, நவீன சமூகத்தில் பல பயனுள்ள பயன்பாடுகளை கொண்டுள்ளது

படமெடுத்தல்[தொகு]

 • வானவியல்
 • நெருப்பு கண்டறிதல்
 • ஒளிவட்ட வெளியேற்றத்தை (corona discharge ) கண்டறிதல் மூலம் உயர் மின்னழுத்த காப்பு சோதனை

ஒளி மூலங்களின் பயன்பாடுகள்[தொகு]

 • ஃப்ளூரசண்ட் விளக்குகள்
 • லேசர்கள்

ஒளிரும் சாயம் தொடர்பான பயன்பாடுகள்[தொகு]

 • ஃப்ளோரசன்ட் ஒளியியல் வெளுப்பான்
 • வண்ணப்பூச்சுகள்
 • பாதுகாப்பு

பகுப்பாய்வு பயன்பாடுகள்[தொகு]

 • தடய அறிவியல்
 • அங்கீகரிப்பதற்கு
 • தெளிவற்ற கையெழுத்து பிரதிகளை படித்தல்
 • இரசாயன குறிப்பான்கள்
 • சுகாதார இணக்கதிற்கு
 • நிறமாலை ஒளிமானியியல்
 • கனிம ஆய்வு
புற ஊதா கதிரின் மூலம் ஒளியூட்டப்படும்பொழுது வெவ்வேறு அலைநீளங்களில் கனிம மாதிரிகள் மின்னுகின்றன

பொருளறிவியல் பயன்கள்[தொகு]

 • ஒளி கல்லச்சு வரைவியல் (Photolithography)
 • மைகள், பசைகள், வார்னிஷ் மற்றும் பூச்சுகள் பதப்படுத்துதல்
 • EPROM தொகுதிகள் அழித்தல்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

 1. Beeson, Steven; Mayer, James W. "12.2.2 Discoveries beyond the visible". Patterns of light: chasing the spectrum from Aristotle to LEDs. New York: Springer. p. 149. ISBN 978-0-387-75107-8. 
 2. Hockberger, P. E. (2002). "A history of ultraviolet photobiology for humans, animals and microorganisms". Photochem. Photobiol. 76 (6): 561–579. doi:10.1562/0031-8655(2002)076<0561:AHOUPF>2.0.CO;2. பப்மெட் 12511035. http://www.bioone.org/doi/abs/10.1562/0031-8655%282002%29076%3C0561%3AAHOUPF%3E2.0.CO%3B2. 
 3. The ozone layer protects humans from this. Lyman, T. (1914). "Victor Schumann". Astrophysical Journal 38: 1–4. doi:10.1086/142050. 
 4. "ISO 21348 Definitions of Solar Irradiance Spectral Categories".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புற_ஊதாக்_கதிர்&oldid=1838803" இருந்து மீள்விக்கப்பட்டது