தங்குதன்(V) புரோமைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
தங்குதன் பெண்டாபுரோமைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13470-11-6 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 139467 |
| |
| பண்புகள் | |
| WBr5 | |
| வாய்ப்பாட்டு எடை | 583.36 கி/மோல் |
| தோற்றம் | கரும்பழுப்பு நிறப் படிகங்கள் நீருறிஞ்சும் |
| உருகுநிலை | 286 °C (547 °F; 559 K) |
| கொதிநிலை | 333 °C (631 °F; 606 K) |
| +250.0•10−6 செ.மீ3/மோல் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தங்குதன்(V) புரோமைடு (Tungsten(V) bromide) என்பது WBr5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு புரோமைடு ஈந்தணைவிகளால் பாலமைக்கப்பட்ட ஈரெண்முக கட்டமைப்பை இச்சேர்மம் கொண்டுள்ளது[1].
தயாரிப்பும் கட்டமைப்பும்
[தொகு]தங்குதன் தூளுடன் புரோமினைச் சேர்த்து 650-1000 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் தங்குதன்(V) புரோமைடு உருவாகிறது. பெரும்பாலும் இவ்விளைபொருளுடன் தங்குதல் எக்சாபுளோரைடு கலந்து தூய்மையற்ற நிலையிலேயே காணப்படுகிறது [2].
தங்குதன்(V) புரோமைடு கட்டமைப்பில் ஈரெண்முகங்கள் விளிம்பில் பகிர்ந்து கொள்கின்ற அமைப்பைப் பெற்றுள்ளதாக எக்சு கதிர் விளிம்பு விளைவு பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன [1].
வினைகள்
[தொகு]ஒடுக்க வினை மூலம் பிற தங்குதன் சேர்மங்களைத் தயாரிக்க தங்குதன்(V) புரோமைடு ஒரு முன்னோடிச் சேர்மமாகத் திகழ்கிறது. உதாரணமாக, அலுமினியம் அல்லது தங்குதனுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக தங்குதன்(IV) புரோமைடைத் தயாரிக்கலாம் [2]. வேதி ஆவிக் கடத்தல் முறையில் WBr4 தூய்மையாக்கப்படுகிறது.
- 3 WBr5 + Al → 3 WBr4 + AlBr3
240 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாதல் செயல் முறையின் மூலமாக எஞ்சியுள்ள தங்குதன்(V) புரோமைடும் அலுமினியம் டிரைபுரோமைடும் நீக்கப்படுகின்றன.
தங்குதன் டெட்ராபுரோமைடை சூடுபடுத்தி தங்குதன்(II) புரோமைடு தயாரிக்கப்படுகிறது [2]. 450-500 °செல்சியசு வெப்பநிலையில் வாயுநிலையிலுள்ள தங்குதன்(V) புரோமைடு பசுமஞ்சள் நிறத்திலுள்ள தங்குதன்(II) புரோமைடை வீழ்படிவாக விட்டுவிட்டு வெளியேறுகிறது. இவ்வினையைப் போன்ற தயாரிப்பு முறையிலேயே தங்குதன்(II) குளோரைடும் தயாரிக்கப்படுகிறது.
குறைத்துப் பதிலிடும் வினைகள்
[தொகு]தங்குதன்(V) புரோமைடு சேர்மத்தை எளிதாக ஒடுக்க முடியும் என்பதால் மாற்று செயற்கை வழிமுறைப் பாதையில் தங்குதன்(IV) ஆலைடு கூட்டுப்பொருட்களை தயாரிக்க முடியும். உதாரணமாக, பிரிடினுடன் தங்குதன்(V) புரோமைடை வினை புரியச் செய்தால் WBr4(py)2 கிடைக்கிறது.[2]
- 2 WBr5 + 7 C5H5N → 2 WBr4(C5H5N)2 + பைபிரிடின் + C5H5NHBr
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Y.-Q. Zheng, K. Peters and H. G. von Schnering (1998) "Crystal structure of tungsten pentabromide, WBr5" Zeitschrift für Kristallographie - New Crystal Structures 213(3) 471
- ↑ 2.0 2.1 2.2 2.3 R.E. McCarley, T.M. Brown "The Preparation and Reactions of Some Tungsten (II) and Tungsten (IV) Halides" Inorg. Chem. 1964, volume 3, 1232-1236. எஆசு:10.1021/ic50019a007