தங்குதன்(III) ஆக்சைடு
பண்புகள் | |
---|---|
W2O3 | |
வாய்ப்பாட்டு எடை | கி/மோல் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்குதன்((III) ஆக்சைடு (Tungsten(III) oxide ) என்பது W2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2006 ஆம் ஆண்டு முதல் அறியப்படுகிறது. W2(N(CH3)2)6 சேர்மத்தை முன்னோடியாகக் கொண்டு தயாரிக்கையில் 140 மற்றும் 240 ° செல்சியசு வெப்பநிலையில் அணு அடுக்குகளில் மென்படலமாக தங்குதன் ஆக்சைடு படிகிறது[1] பெரும்பாலான நடைமுறை நூல்களில் இம்முறையைப் பற்றிய குறிப்புகள் இல்லை[2][3].. சில பண்டைய நூல்களில் W2O3 சேர்மம் தொடர்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் தங்குதனின் அணுஎடை அந்நேரத்தில் 92 எனக்கருதப்பட்டது. அதாவது தோராயமாக 183.84 என்ற தற்போதைய ஏற்றுக் கொள்ளப்பட்ட அணு எடையில் பாதியாகும்[4].
பயன்கள்
[தொகு]பல்வேறு வகையான அகச்சிவப்புக் கதிர்களை ஈர்க்கும் பூச்சுகள் மற்றும் தகடுகள் தயாரிப்பில் தங்குதன்((III) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Atomic Layer Deposition of Tungsten(III) Oxide Thin Films from W2(NMe2)6 and Water: Precursor-Based Control of Oxidation State in the Thin Film Material Charles L. Dezelah IV, Oussama M. El-Kadri, Imre M. Szilagyi, Joseph M. Campbell, Kai Arstila, Lauri Niinistö, Charles H. Winter, J. Am. Chem. Soc., 128 (30), 9638 -9639, (2006)எஆசு:10.1021/ja063272w
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Wells, A. F. (1984), Structural Inorganic Chemistry (5th ed.), Oxford: Clarendon Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
- ↑ F. T Conington (1858), A handbook of chemical analysis, based on Dr. H. Will's Anleitung zur chemischen analyse, Longman, Brown, Green, Longmans, and Roberts
- ↑ Willey, R.R. (2002), Practical Design and Production of Optical Thin Films. Available from: http://www.crcnetbase.com/isbn/9780203910467 CRC Press. Section:5.3.1.29 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-91046-7 Accessed: 17-07-2014