உள்ளடக்கத்துக்குச் செல்

தங்குதன்(IV) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(IV) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுளோரோதங்குதன்
வேறு பெயர்கள்
தங்குதன்(4+) டெட்ராபுளோரைடு, தங்குதன் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
13766-47-7
ChemSpider 123101
EC number 232-029-1
InChI
  • InChI=1S/4FH.W/h4*1H;/q;;;;+4/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139582
  • F[W](F)(F)F
பண்புகள்
WF4
வாய்ப்பாட்டு எடை 259.8336128 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு அல்லது கருப்பு நிற திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தங்குதன்(IV) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தங்குதன்(IV) புளோரைடு (Tungsten(IV) fluoride) என்பது WF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். தங்குதன் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தங்குதன்(V) புளோரைடுடன் தங்குதன்(IV) புளோரைடை சேர்த்து ஓர் இடைநிலையாக செயல்படுத்த இச்சேர்மம் சிறிதளவு ஆராயப்பட்டுள்ளது. தங்குதன் அறுபுளோரைடைப் பயன்படுத்தி தங்குதன் படலங்களை படியவைக்கும் வேதி ஆவிப் படிவு முறையில் ஓர் இடைநிலையாகவும் அறியப்பட்டது.[2]

கட்டமைப்பு

[தொகு]

மோசுபௌர் நிறமாலையியலின் அடிப்படையில் தங்குதன்(IV) புளோரைடு பலபடிசார் கட்ட்டமைப்பைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.[3]

தயாரிப்பு

[தொகு]

ஆர்சனிக்கு முப்புளோரைடுடன் WCl4(MeCN)2 என்ற அணைவுச் சேர்மத்தைச் சேர்த்து சூடாக்கினால் தங்குதன்(IV) புளோரைடு உருவாகிறது.[4] 600 முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் தங்குதன் அறுபுளோரைடுடன் தங்குதன் இழையைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[1]

வினைகள்

[தொகு]

புளோரின் மற்றும் குளோரின் ஆகியவற்றுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக W(VI) சேர்மங்களுக்கு மறு-ஆக்சிசனேற்றம் செய்யலாம்:

WF4 + X2 → WF4X2

தொடர்ச்சியான வெப்பமூட்டல் மூலம் இது தங்குதன் அறு புளோரைடாகவும் தங்குதனாகவும் விகிதாச்சாரமின்றி மாற்றமடைகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Butskii, V. D.; Perov, V. S. (1977). "Synthesis and certain properties of tungsten tetrafluoride". Zhurnal Neorganicheskoi Khimii 22 (1): 14–17. 
  2. Creighton, J. R. (1989). "Selectivity loss during tungsten chemical vapor deposition: The role of tungsten pentafluoride". Journal of Vacuum Science & Technology A: Vacuum, Surfaces, and Films 7 (3): 621–624. doi:10.1116/1.575854. Bibcode: 1989JVSTA...7..621C. https://zenodo.org/record/1236100. 
  3. Dzhevitskij, B. Eh; Savvateev, N. N.; Butskij, V. D.; Fal'Kengof, A. T.; Novotortsev, V. M.; Rakitin, Yu V.; Pervov, V. S. (1980). "Moessbauer spectrum and magnetic properties of tungsten tetrafluoride". Zhurnal Neorganicheskoj Khimii 25 (9): 2327–2329. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:13644276. 
  4. Meinert, Hasso; Dimitrov, A. "On the chemistry of tungsten tetrafluoride" Zeitschrift für Chemie (1976), 16(1), 29-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(IV)_புளோரைடு&oldid=4149245" இலிருந்து மீள்விக்கப்பட்டது