தங்குதன்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(III)ஆக்சைடு
Tungsten(III) oxide
பண்புகள்
W2O3
வாய்ப்பாட்டு எடை கி/மோல்
அடர்த்தி கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தங்குதன்((III) ஆக்சைடு (Tungsten(III) oxide ) என்பது W2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்குதன் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2006 ஆம் ஆண்டு முதல் அறியப்படுகிறது. W2(N(CH3)2)6 சேர்மத்தை முன்னோடியாகக் கொண்டு தயாரிக்கையில் 140 மற்றும் 240 ° செல்சியசு வெப்பநிலையில் அணு அடுக்குகளில் மென்படலமாக தங்குதன் ஆக்சைடு படிகிறது[1] பெரும்பாலான நடைமுறை நூல்களில் இம்முறையைப் பற்றிய குறிப்புகள் இல்லை[2][3].. சில பண்டைய நூல்களில் W2O3 சேர்மம் தொடர்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் தங்குதனின் அணுஎடை அந்நேரத்தில் 92 எனக்கருதப்பட்டது. அதாவது தோராயமாக 183.84 என்ற தற்போதைய ஏற்றுக் கொள்ளப்பட்ட அணு எடையில் பாதியாகும்[4].

பயன்கள்[தொகு]

பல்வேறு வகையான அகச்சிவப்புக் கதிர்களை ஈர்க்கும் பூச்சுகள் மற்றும் தகடுகள் தயாரிப்பில் தங்குதன்((III) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Atomic Layer Deposition of Tungsten(III) Oxide Thin Films from W2(NMe2)6 and Water: Precursor-Based Control of Oxidation State in the Thin Film Material Charles L. Dezelah IV, Oussama M. El-Kadri, Imre M. Szilagyi, Joseph M. Campbell, Kai Arstila, Lauri Niinistö, Charles H. Winter, J. Am. Chem. Soc., 128 (30), 9638 -9639, (2006)எஆசு:10.1021/ja063272w
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  3. Wells, A. F. (1984), Structural Inorganic Chemistry (5th ed.), Oxford: Clarendon Press, ISBN 0-19-855370-6
  4. F. T Conington (1858), A handbook of chemical analysis, based on Dr. H. Will's Anleitung zur chemischen analyse, Longman, Brown, Green, Longmans, and Roberts
  5. Willey, R.R. (2002), Practical Design and Production of Optical Thin Films. Available from: http://www.crcnetbase.com/isbn/9780203910467 CRC Press. Section:5.3.1.29 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-91046-7 Accessed: 17-07-2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்(III)_ஆக்சைடு&oldid=2697200" இலிருந்து மீள்விக்கப்பட்டது