உள்ளடக்கத்துக்குச் செல்

ஓல்மியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
67 டிசிப்ரோசியம்ஓல்மியம்எர்பியம்
-

Ho

Es
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
ஓல்மியம், Ho, 67
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளிபோல் வெண்மை
அணு நிறை
(அணுத்திணிவு)
164.93032(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f11 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 29, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
8.79 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
8.34 g/cm³
உருகு
வெப்பநிலை
1734 K
(1461 °C, 2662 °F)
கொதி நிலை 2993 K
(2720 °C, 4928 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
17.0 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
265 கி.ஜூ/மோல்
வெப்பக்
கொண்மை
(25 °C)
27.15 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1432 1584 (1775) (2040) (2410) (2964)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்சைடு
நிலைகள்
3
(கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.23 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 581.0 kJ/(mol
2nd: 1140 kJ/mol
3rd: 2204 kJ/mol
அணு ஆரம் 175 பிமீ
வேறு பல பண்புகள்
காந்த வகை paramagnetic
மின்தடைமை (r.t.) (பல்படிகம்) 814 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 16.2
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை வெ. நி.) (பல்படிகம்)
11.2 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2760 மீ/நொடி
யங்கின் மட்டு 64.8 GPa
Shear modulus 26.3 GPa
அமுங்குமை 40.2 GPa
பாய்சான் விகிதம் 0.231
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
481 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
746 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-60-0
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: ஓல்மியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
163Ho செயற்கை 4570 yr ε 0.003 163Dy
164Ho செயற்கை 29 min ε 0.987 164Dy
165Ho 100% Ho ஆனது 98 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
166Ho செயற்கை 26.763 h β- 1.855 166Er
167Ho செயற்கை 3.1 h β- 1.007 167Er
மேற்கோள்கள்

ஓல்மியம் (Holmium, ஹோல்மியம்) அணுவெண் 67 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 98 நொதுமிகள் உள்ளன. ஓல்மியத்தின் வேதியியல் குறியீடு Ho ஆகும். இத் தனிமம் லாந்த்தனைடுகள் வரிசையைச் சேர்ந்த மெதுமையான, வளைந்து ஒடுங்கக்கூடிய வெள்ளிபோன்ற வெண்மையான மாழை. காற்றில் ஆக்சைடாகி சிதைவடையாமல் இருக்கும் தன்மை கொண்டது. மோனாசைட் (monazite), கடோலினைட் (gadolinite) ஆகிய கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

இந்த அரிதில் கிடைக்கும் தனிமம் மூன்று இயைனி (trivalent) மாழை. தனிமமாகக் கிடைக்கும் பொருட்கள் யாவற்றினும் அதிக காந்தத் திருப்புமை கொண்ட பொருள் ஓல்மியம். இதன் காந்தத் திருப்புமை (10.6µB). இயிற்றியம் என்னும் தனிமத்துடன் சேர்ந்து பலவகையான காந்தப் பண்புகள் கொண்ட கலவைகளில் பயன்படுகின்றது.

ஓல்மியம் மெதுமையான வளைந்து நெளிந்து ஒடுங்கக்கூடிய மாழை. இது காற்றில் நிலையாக இருக்கக்கூடிய அவ்வளவாக அரிப்பு அடையாப் பொருள். காற்றில் ஈரப்பதம் இருந்தால் உயர் வெப்ப நிலைகளில் ஆக்ஸைடாக மாறி விடுகின்றது.

பயன்பாடுகள்[தொகு]

இதன் காந்தப் பண்புகளால், மிகுவலிமை கொண்ட காந்தங்கள் செய்யப் பயன்படுகின்றது. அணு உலையிலும் அணுக்கரு பிளவில் தோன்றும் நொதுமிகளை பற்றுவதற்குப் பயன்படுகின்றது.

  • இயிற்றியம்-இரும்பு-கார்னெட் (YIG), இயிற்றியம்-லாந்த்தன்ம்-ஃவுளூரைடு (YLF) முதலான பொருட்களால் செய்யப்படும் திண்மநிலை சீரொளி மிகைப்பி (லேசர்) கருவிகளில் பயன்படுகின்றது. இதே போல மருத்துவம், மற்றும் பல்மருத்துவத்தில் பயன்படுத்தும் சில் நுண்ணலைக் கருவிகளிலும் பயன்படுகின்றது.
  • கண்ணாடிகளில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் பெற ஹோல்மியம் ஆக்சைடு பயன்படுகின்றது.
  • ஓல்மியம் சேர்த்த கண்ணாடிகள், புற ஊதாக்கதிர்கள் மற்றும் காணும் நிற ஒளியலைகளுக்கான துல்லிய நிறமாலை அளவிகளில், துல்லியம் நிறுவும் ஒப்பீட்டு பொருளாகப் பயன்படுகின்றது.
  • சிர்க்கோனியாவினால் செய்யப்பட்ட நகைகளில் நிறமூட்டியாகப் பயன்படுகின்றது. புறவொளி சூழலுக்கு ஏற்றார்போல இருநிறத் தன்மை (மஞ்சள் அல்லது செம்மஞ்சள்) கொண்டதாகச் செய்ய பயன்படுகின்றது.
  • ஓல்மியம் பயன்படும் லேசர்களைக் கொண்டு சிறுநீரகக் கட்டிகளை உடைக்கப் பயன்படுகின்றது.

வரலாறு[தொகு]

கிடப்பும் மலிவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்&oldid=2761037" இலிருந்து மீள்விக்கப்பட்டது